பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு அலகுக் காவடி, தேர்க்காவடி உள்ளிட்ட குறிப்பிட்ட சில வேண்டுதல்களுக்கான முன்பதிவு புதன்கிழமை (மார்ச் 19) இரவு 7.30 மணிக்குத் தொடங்கியுள்ளது.
புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறவுள்ளது.
மேற்கூறப்பட்ட வேண்டுதல்களைச் செலுத்த விரும்புவோர், https://panguniuthiram.sg/ என்ற தளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.
தேர்க்காவடி, இடும்பன் காவடி, தொட்டில் காவடி ஆகியவற்றைச் செலுத்த விரும்புவோரும் இத்தளத்தைப் பயன்படுத்தலாம்.
பங்கேற்க விரும்பும் இசைக்குழுக்கள், வெள்ளிக்கிழமை (மார்ச் 21) வரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பால்காவடி, பால் குடம் ஆகியவற்றுக்கான முன்பதிவு நிறைவுபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் விவரங்களுக்கு ஆலயத்தை 6756 1912 என்ற எண்ணில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளலாம்.