தீ விபத்து ஏற்படுவதால் எல்பா ‘இபிடி 602எஸ்’ ரக துணி உலர்த்தியை பயன்படுத்த வேண்டாம் என அறிவுரை

தீ விபத்து ஏற்படுவதால் எல்பா ‘இபிடி 602எஸ்’ ரக துணி உலர்த்தியை பயன்படுத்த வேண்டாம் என அறிவுரை

படம்: பயனீட்டாளர் பொருள் பாதுகாப்பு அலுவலகம்

10 Nov 2026 - 5:58 pm

1 mins read

‘எல்பா’ நிறுவனத்தின் குறிப்பிட்ட துணி உலர்த்தும் சாதனைத்தைப் பயன்படுத்த வேண்டாம் அல்லது கவனிக்க ஆளில்லாமல் அதை இயங்க விடக்கூடாது என்று சிங்கப்பூரின் பயனீட்டாளர் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

அந்த வகை துணி உலர்த்தியால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 10ஆம் தேதி வெளியிட்ட ஒரு குறிப்பில் பயனீட்டாளர் பொருள் பாதுகாப்பு அலுவலகம் (சிபிஎஸ்ஓ), எல்பாவின் இபிடி 602எஸ் ரக துணி உலர்த்தி சம்பந்தப்பட்ட ஆறு தீ விபத்து சம்பவங்கள் கடந்த ஐந்து மாதங்களில் சிங்கப்பூரில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தது.

இந்தத் தீ விபத்துகளுக்கான மூலக் காரணம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அது குறிப்பிட்டது.

இந்த குறிப்பிட்ட ரக துணி உலர்த்தி தற்போது உள்ளூர் சில்லறை விற்பனை நிலையங்களில் விற்கப்படவில்லை. இருந்தாலும் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள சாதனங்கள் அதிக தீ அபாயத்தை ஏற்படுத்துவதாக ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்தது.

“துணி உலர்த்தி பயன்பாட்டில் இருக்கும்போதெல்லாம் அதை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு வலியுறுத்துகிறோம், ஆளில்லாமல் அதை இயக்கக்கூடாது. முடிந்தால், அந்த உலர்த்தியை பயன்படுத்த வேண்டாம்,” என்று சிங்கப்பூர் போட்டி, பயனீட்டாளர் ஆணையத்தின்கீழ் இயங்கும் சிபிஎஸ்ஓ தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்