‘ஓங் பெங் செங் குறித்து விரைவில் முடிவு’

‘ஓங் பெங் செங் குறித்து விரைவில் முடிவு’

1 mins read
அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தகவல்
e45e3daa-6e6c-4a1e-af33-1ef95df030d0
திரு ஓங் பெங் செங் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சொத்து அதிபர் ஓங் பெங் செங் தொடர்பில் விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாக அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் (ஏஜிசி) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

சிங்கப்பூரின் ஃபார்முலா ஒன் (எஃப்1) பந்தயத்தை பிரபலப்படுத்துவதின் தலைவரான திரு ஓங், 78, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் எதிர்நோக்கிய பல குற்றச்சாட்டுகளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஐந்து குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஐந்து குற்றச்சாட்டுகளில் நான்கு, பொதுத்துறை ஊழியராக, திரு ஓங் மற்றும் பங்குச் சந்தையில் இடம்பெற்ற கட்டுமான நிறுவனமான லாம் சாங் ஹோல்டிங்ஸின் நிர்வாக இயக்குனர் டேவிட் லாம் ஆகியோரிடமிருந்து மதிப்புமிக்க பொருள்களைப் பெற்றுக்கொண்டது தொடர்பானவை. நீதிமன்ற விசாரணைக்கு இடையூறாக இருந்த ஒரு குற்றச்சாட்டையும் ஈஸ்வரன் ஒப்புக்கொண்டார்.

அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், திரு லாம் குறித்து தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை. திரு லாம், திரு ஓங் இருவர் மீதும் எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்