தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏர் இந்தியா விபத்து: சிங்கப்பூர் தலைவர்கள் இரங்கல்

1 mins read
9b311f81-7f12-4716-ab38-103dbed8ce8f
விபத்தில் மாண்ட தங்கள் உறவினர்களின் உடல்களுக்கு அருகே கதறி அழும் குடும்பத்தார். - படம்: ஏஎஃப்பி

அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 265 கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தியத் தலைவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணனும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

திரு வோங், இந்தத் துயரச் சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும் மிகுந்த வருத்தத்துக்கு ஆளானதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடித்தில் குறிப்பிட்டுள்ளார். விபத்தில் மரணமடைந்தோர் குடும்பத்தார் மற்றும் அன்புக்குரியவர்களுக்குத் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் சொன்னார்.

திரு வோங்கின் கடிதத்தை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வெளியிட்டது.

அதேபோல் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்குக் கடிதம் அனுப்பினார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களையும் இந்திய மக்களுக்கும் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக டாக்டர் விவியன் தமது கடிதத்தில் தெரிவித்தார்.

போயிங் 787 டிரீம்லைனர் வகை ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் பிரிட்டனைச் சேர்ந்த ரமே‌ஷ் விஸ்வே‌ஷ்குமார் என்பவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்