தேசிய சேவையாளர்களுக்கு $200

1 mins read
caa6eea4-5fe0-4ca0-b3a6-dcbc7b3edd76
தேசிய சேவையாளர்களுக்கு நவம்பரில் சிறப்புத் தொகை வழங்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் அனைத்து தேசிய சேவையாளர்களும் 200 வெள்ளி சிறப்புத் தொகை பெறவிருக்கின்றனர்.

சுமார் 1.2 மில்லியன் முந்தைய, தற்போதைய தேசிய சேவையாளர்களுக்கு நவம்பரில் $200 தேசியச் சேவை LifeSG சிறப்புத் தொகை கிடைக்கும். இது பற்றி முதல் முறையாக 2024 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்தச் சிறப்புத் தொகையை இணையத் தளங்களிலும் ‘பேநவ்’ அல்லது ‘நெட்ஸ்கியூஆர்’ ஏற்றுக் கொள்ளும் கடைகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு வருடத்திற்கு இது செல்லுபடியாகும்.

நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் தகுதிபெற்ற தேசிய சேவையாளர்களுக்கு LifeSG சிறப்புத் தொகை அடுத்தடுத்து விநியோகிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சும் உள்துறை அமைச்சும் அக்டோபர் 30ஆம் தேதி வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.

LifeSG சிறப்புத் தொகை வழங்கப்பட்டதும் குறுந்தகவல், கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று அமைச்சுகள் கூறின.

அனைத்து தேசிய சேவையாளர்களும் LifeSG சிறப்புத் தொகை வரவு குறித்து LifeSG செயலி வழியாகத் தெரிந்துகொள்ளலாம்.

மின்னிலக்க வழியில் இந்தப் பற்றுச்சீட்டு கிடைக்காதவர்கள் 1800 367-6767 என்ற என்எஸ் நிலைய (NS Call Centre ) எண்ணுடன் தொடர்புகொண்டு பற்றுச்சீட்டுக்கான பிரதியைக் கேட்டுப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்