சிங்கப்பூரில் ஊழியர்களை ஒரே இடத்திற்கு மாற்றும் ஏஎன்ஸி

சிங்கப்பூரில் ஊழியர்களை ஒரே இடத்திற்கு மாற்றும் ஏஎன்ஸி

1 mins read
ff2a717a-7fda-41bb-9de0-e9544d0616f5
ஏஎன்ஸி நிறுவனம், மரினா ஒன் வளாகத்திற்கு மாறுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஏஎன்ஸி குழுமம், அதன் ஊழியர்களை ஒரே கூரையின்கீழ் கொண்டுவரவிருக்கிறது. இவ்வாண்டு (2026) பிற்பகுதியில் அது நடப்புக்கு வரும்.

இரண்டு அலுவலகங்களைச் சேர்ந்த ஊழியர்களை நகர்ப் பகுதியில் புதிய இடமொன்றிற்குக் கொண்டுவரத் திட்டமிடுவதாக ஏஎன்ஸி கூறியது. நம்பத்தகுந்த வட்டாரங்கள் அந்தத் தகவலை வெளியிட்டன.

ஏஎன்ஸி நிறுவனம், மரினா ஒன் வளாகத்திற்கு மாறுகிறது. ஓ‌ஷன் ஃபைனான்‌ஷியல் சென்டரில் அதன் தவணைக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. இன்றளவில் ஊழியர்கள் வேலை செய்யும் விதத்தை மேலும் சிறந்த முறையில் ஆதரிக்கும் வகையிலும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டும் முடிவு எடுக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய நிறுவனமான ஏஎன்ஸி சொன்னது.

அலுவலகச் செலவைக் குறைக்க இங்குள்ள மற்றச் சில வங்கிகளும் முயன்றுவரும் வேளையில் ஏஎன்ஸியின் முடிவு வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்