தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயங்கரவாதத்திற்கு எதிரான பாவனைப் பயிற்சிகள் சமூக பிணைப்பை வலுப்படுத்துகின்றன: சிம் ஆன்

2 mins read
8ebb9bfe-c22c-4c40-9131-3302fd91fd1d
‘எக்சர்சைஸ் ஹார்ட்பீட் 2025’ பயங்கரவாத எதிர்ப்பு அவசரகாலத் தயார்நிலை பாவனைப் பயிற்சி. - படம்: த.கவி
multi-img1 of 3

சிங்கப்பூர் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிரான அவசரகாலத் தயார்நிலைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

‘எக்சர்சைஸ் ஹார்ட்பீட் 2025’ எனும் இப்பயிற்சி நான்கு வெவ்வேறு சூழ்நிலைகளுடன் திங்கட்கிழமை (நவம்பர் 3) நடைபெற்றது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சிகியூ@கிளார்க் கீயில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூர் காவல்துறையின் அவசரநிலைக் குழுவினர் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டோர் பாவனைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

உள்துறைக் குழு, சமூகப் பங்குதாரர்கள், சிகியூ@கிளார்க் கீ அமைப்பின் பங்குதாரர்கள் ஆகியோருக்கு இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பார்த்ததில் உள்துறை, வெளியுறவு மூத்த துணையமைச்சர் சிம் ஆன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Watch on YouTube

“பல்வேறு பங்குதாரர்களும் ஒன்றுசேர்ந்து அச்சுறுத்தல்களுக்கு எதிரான பயிற்சிகளை நடத்துவது முக்கியம். இது எங்கள் சமூக உறவுகளை வலுப்படுத்தவும் எங்கள் திட்டங்களின் பொருத்தத்தைக் கண்காணிக்கவும் உதவுகிறது. மேலும், நெருக்கடி நேரங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் செயல்திறனை மேம்படுத்தவும் இது உதவுகிறது,” என்றார் அவர்.

சிங்கப்பூர் காவல்துறையின் பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுவில் இணைந்து, சிங்கப்பூரை மேலும் வலிமையான, பாதுகாப்பான நாடாக உருவாக்க திருவாட்டி சிம் ஆன் ஊக்குவித்தார்.

சிகியூ@கிளார்க் கீயில் நடைபெற்ற பயிற்சியில் அவசரகாலத் தயார்நிலையைச் சோதிக்க பல்வேறு சூழல்கள் சித்திரிக்கப்பட்டன.

‘எக்சர்சைஸ் ஹார்ட்பீட் 2025’ பயங்கரவாத எதிர்ப்பு அவசரகால தயார்நிலை பாவனைப் பயிற்சி.
‘எக்சர்சைஸ் ஹார்ட்பீட் 2025’ பயங்கரவாத எதிர்ப்பு அவசரகால தயார்நிலை பாவனைப் பயிற்சி. - படம்: த.கவி

முதல் பாவனைச் சூழலில், பாதுகாப்பு அதிகாரிகளும் அவசரகாலச் செயற்குழுவும் கவனிக்கப்படாத ஒரு பையைக் கையாண்டனர். பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றிக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் சம்பவ இடத்துக்கு வரும்வரை நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருந்தனர்.

‘எக்சர்சைஸ் ஹார்ட்பீட் 2025’ பயங்கரவாத எதிர்ப்பு அவசரகால தயார்நிலை பாவனைப் பயிற்சி.
‘எக்சர்சைஸ் ஹார்ட்பீட் 2025’ பயங்கரவாத எதிர்ப்பு அவசரகால தயார்நிலை பாவனைப் பயிற்சி. - படம்: த.கவி
‘எக்சர்சைஸ் ஹார்ட்பீட் 2025’ பயங்கரவாத எதிர்ப்பு அவசரகால தயார்நிலை பாவனைப் பயிற்சி.
‘எக்சர்சைஸ் ஹார்ட்பீட் 2025’ பயங்கரவாத எதிர்ப்பு அவசரகால தயார்நிலை பாவனைப் பயிற்சி. - படம்: த.கவி
‘எக்சர்சைஸ் ஹார்ட்பீட் 2025’ பயங்கரவாத எதிர்ப்பு அவசரகால தயார்நிலை பாவனைப் பயிற்சி.
‘எக்சர்சைஸ் ஹார்ட்பீட் 2025’ பயங்கரவாத எதிர்ப்பு அவசரகால தயார்நிலை பாவனைப் பயிற்சி. - படம்: த.கவி

இரண்டாவது சூழலில், தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பலரைக் காயப்படுத்திய கத்தி ஏந்திய ஓட்டுநர் ஒருவரை அதிகாரிகளும் அவசரநிலை நடவடிக்கைக் குழுவினரும் மடக்கிப் பிடித்தனர்.

பல்வேறு உள்துறைக் குழுக்களுக்கும் கிளார்க் கீயில் உள்ள அவசரநிலை நடவடிக்கைக் குழு (செர்ட்) உறுப்பினர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்வதன் முக்கியத்துவத்தையும் அவசர நிலைகளில் தயாராக இருப்பதையும் வலியுறுத்தியது.

சமூகத்தில் அனைவரும், குறிப்பாக, வணிக நிறுவனங்கள் தீவிரவாத அச்சுறுத்தல்களிலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மனிதவள அமைச்சின் SGSecure@Workplaces திட்டத்தில் பங்கேற்பதன் மூலம், தீவிரவாதத் தாக்குதல்களுக்கும் பிற நெருக்கடிகளுக்கும் எதிரான விழிப்புணர்வையும் மீள்திறனையும் வலுப்படுத்தி, பணியிடத்தில் ஒற்றுமையையும் வணிகத் தொடர்ச்சியையும் உறுதிசெய்யலாம் என்று காவல்துறை கூறியது.

பேரழிவுகளைத் தவிர்க்கவும் உயிர்களைக் காப்பாற்றவும் நெருக்கடி நேரங்களில் நாட்டின் பாதுகாப்பை பேணவும் உரிய நேரத்தில் தலையிடுவது முக்கியம். அமைதிக் காலத்தில் மீள்திறன்மிக்க சமூகத்தை உருவாக்குவதன் அவசியத்தைக் காவல்துறை மீண்டும் வலியுறுத்தியது.

கூடுதல் செய்தி: ஷர்வேஸ்வரி சரவணன்

குறிப்புச் சொற்கள்