சிங்கப்பூருக்கு US$3.25 பில்லியன் வருமான வரி செலுத்தியது ஆப்பிள்

சிங்கப்பூருக்கு US$3.25 பில்லியன் வருமான வரி செலுத்தியது ஆப்பிள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

10 Nov 2026 - 2:01 pm

1 mins read

சிங்கப்பூரின் குறைவான வரி விகிதங்கள், வரிச் சலுகைகளால் பயனடைந்த ஆப்பிள் நிறுவனம், 2026ஆம் நிதியாண்டில் சிங்கப்பூருக்கு வருமான வரியாக US$3.25 பில்லியனை (S$4.15 பி.) செலுத்தியுள்ளது. ஐஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், செப்டம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் உலகளவில் ரொக்கமாகச் செலுத்திய US$34.59 பில்லியன் மொத்த வருமான வரியில், சிங்கப்பூரில் செலுத்திய வரி ஏறத்தாழ 9.4 விழுக்காடாகும். அமெரிக்காவின் 21 விழுக்காட்டுச் சட்டபூர்வ வரி விகிதத்துடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூரின் சலுகைகள் ஆப்பிளின் வரிச் செலவை US$5.49 பில்லியன் குறைத்துள்ளன.

எனினும், பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் குறைந்தபட்சம் 15 விழுக்காடு வரி செலுத்துவதை உறுதிசெய்யும் உலகளாவிய குறைந்தபட்ச வரி நடைமுறையால், இந்நிறுவனம் US$2.51 பில்லியன் கூடுதல் வரியைச் செலுத்தியது. சிங்கப்பூரின் வழக்கமான நிறுவன வரி 17 விழுக்காடாக இருப்பினும், சலுகைகள் அதனை மேலும் குறைக்கின்றன.

பிற உள்ளூர் வரிச் சரிசெய்தல்களுடன் சேர்த்து, சிங்கப்பூரால் இந்நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிகர வரிச் செலவுக் குறைப்பு US$2.67 பில்லியனாகும். சிங்கப்பூரில் தனது உண்மையான வரி விகிதத்தை ஆப்பிள் நிறுவனம் வெளியிடவில்லை.

முந்தைய 2025ஆம் ஆண்டு அறிக்கையில் சிங்கப்பூருக்கான வரி விவரங்கள் இடம்பெறாததால், வரித் தொகை கூடியதா அல்லது குறைந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. உலகளவில் இந்நிறுவனம் செலுத்திய வரி முந்தைய ஆண்டைவிடக் குறைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்