தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆடவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

1 mins read
25db928c-0596-4371-9e49-09434430ba17
காலாங் வேவ் கடைத்தொகுதியிலிருந்து உதவி கேட்டு திங்கட்கிழமை (ஜூலை 14) அதிகாலை 1.25 மணி அளவில் அழைப்பு கிடைத்ததாகக் காவல்துறை கூறியது. - படம்: பெரித்தா ஹரியான்

பெண் ஒருவரைக் கொலை செய்ய முயன்றதாக 26 வயது ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாங் வேவ் கடைத்தொகுதியிலிருந்து உதவி கேட்டு திங்கட்கிழமை (ஜூலை 14) அதிகாலை 1.25 மணி அளவில் அழைப்பு கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

29 வயது பெண்ணை அந்த ஆடவர் கத்தியால் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த பொதுமக்களில் சிலர் ஆடவரிடம் இருந்த கத்தியைப் பிடுங்கி அவரை மடக்கிப் பிடித்தனர்.

இதையடுத்து, அந்த ஆடவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

காயமடைந்த பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஆடவர் மீது செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரை மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்த ஏதுவாக விசாரணைக் காவலில் வைக்க அனுமதி அளிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்க இருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆடவருக்கு ஆயுள் தண்டனை அல்லது அபராதம் மற்றும் பிரம்படியுடன் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்