ஆயுதப் படையினருக்கு அனைத்து வசதிகளுடன் அயலகமாய் மாறிய ஆஸ்திரேலியா

ஆயுதப் படையினருக்கு அனைத்து வசதிகளுடன் அயலகமாய் மாறிய ஆஸ்திரேலியா

1 of 8
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

27 Oct 2026 - 6:00 am

2 mins read

ஆஸ்திரேலியாவின் ஷோல்வாட்டர் பே பயிற்சி நிலையத்தில் நடைபெறும் 36வது ‘வாலபி’ போர்ப்பயிற்சியில் முப்படைகளைச் சேர்ந்த 6,000 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

சிங்கப்பூரை விட ஐந்து மடங்கு பெரிய இந்நிலப்பரப்பில் வீரர்களின் தேவைகளை  ‘முன்னணி ஆதரவுக் குழு’ நிறைவு செய்கிறது.

2024ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி திறக்கப்பட்ட டில்பால் முகாம், இந்த ஆதரவுத் தளத்தின் மையமாக விளங்குகிறது.

150 பேரைக் கொண்ட குழுவை வழிநடத்தும் ஆதரவுக் குழுவின் தளபதி லெஃப்டினன்ட் கர்னல் வோங் மெங் கிட், “200க்கும் மேற்பட்ட தளவாடங்களை எல்லை கடந்து கொண்டுவந்து முகாமை அமைக்கும் பணிகள் ஓர் ஆண்டுக்கு முன்பே தொடங்குகின்றன; குடும்பத்தைப் பிரிந்து நிற்கும் வீரர்களின் அர்ப்பணிப்பே இதன் பலம்,” என்கிறார்.

இங்குச் செயல்படும் கட்டமைப்பு, வீரர்களின் தேவைகளை நிறைவு செய்கிறது. முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதோருக்குமான தனித்தனிப் பிரிவுகளுடன் அவர்களுக்குப் பழக்கமான உணவுவகைகள் வழங்கப்படுகின்றன. 

உடற்தகுதியைப் பராமரிக்கத் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் உள்ளது. 

அத்துடன் கடுமையான வெப்பம், குளிரைச் சமாளிக்கும் வசதிகள், நடமாடும் ஊடுகதிர் கருவி, அவசர மருத்துவ வெளியேற்ற ஏற்பாடுகளுடன் மருத்துவ நிலையம் செயல்படுகிறது. 

இவற்றுடன் போக்குவரத்து முனையம், வாகனப் பராமரிப்புப் பிரிவுகள், முப்பரிமாண அச்சிடும் ஆய்வுக்கூடம் ஆகியவையும் இயங்குகின்றன.

சக்கர வாகனப் பராமரிப்புக் குழுவை வழிநடத்தும் ராணுவப் பொறியியல் நிபுணர் எம்இ2 முகம்மது நூர் ஃபரிட், “களத்தில் குறைந்த உதிரிபாகங்களைக் கொண்டு விரைந்து பழுதுநீக்குவது சவாலானது என்றாலும் நாட்டின் தற்காப்பிற்குப் பங்களிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்,” என்கிறார்.

ஆயுத அமைப்புகளைப் பழுதுபார்க்கும் தலைமைத் தொழில்நுட்பப் பயிற்றுவிப்பாளர் எம்இ1 சூரியசாக் சின்ஜியா, “தளவாடங்கள் இயங்கும் நேரத்தை நீட்டித்து, வீரர்கள் தடையின்றிப் பயிற்சியைத் தொடர வழிவகுப்பதே எங்கள் நோக்கம்,” என்று குறிப்பிடுகிறார்.

பயிற்சிக் காலத்தில் வீரர்களுக்கான மருத்துவக் கண்காணிப்பு, உணவு, போக்குவரத்து, கருவிகளின் பராமரிப்பு ஆகிய பணிகளை ஆதரவுக் குழு ஒருங்கிணைத்து வழங்குகிறது.

குறிப்புச் சொற்கள்
ராணுவம்சிங்கப்பூர்தற்காப்பு