தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முப்பதாண்டு சாதனையை முறியடிக்க ஆயத்தமாகும் சிங்கப்பூர் டென்னிஸ் வீரர்கள்

1 mins read
284b8012-9d36-4bd6-a81f-37d676a51e58
கடந்த ஜூலை மாதம் வியட்னாமில் நடைபெற்ற டேவிஸ் கிண்ணப் போட்டியில் பங்கேற்ற சிங்கப்பூர் ஆண்கள் ஒற்றையர் அணி டென்னிஸ் வீரர்கள். - படம்: வியட்னாம் டென்னிஸ் சங்கம்

டிசம்பர் மாதம் வந்தால் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் ஆண்களுக்கான டென்னிஸ் (வலைப்பந்து) போட்டியில் சிங்கப்பூர் பதக்கம் வென்று முப்பதாண்டுகள் முடிவடையும்.

அந்தச் சாதனையை மீண்டும் நிகழ்த்த தற்போதைய சிங்கப்பூர் டென்னிஸ் அணி ஆயத்தமாகி வருகிறது.

மைக்கல் ஜிமெனெஸ், ஷஹீத் ஆலாம், ஜெரால் யாசின், பில் சான், டேனியல் அபாடியா ஆகிய ஐவர் அடங்கிய அணியின் அண்மைய ஆட்டங்களால் உற்சாகத்தின் உச்சியில் உள்ளது.

ஐவர் அடங்கிய மகளிர் அணியும் அவர்களுடன் இணைந்து தாய்லாந்தில் வெற்றியை அறுவடை செய்யக் காத்திருக்கின்றன.

டிசம்பர் 9 முதல் 20 வரை அங்கு நடைபெற இருக்கும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்ல அவ்விரு அணிகளும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தேசிய டென்னிஸ் பயிற்றுநர் டேனியர் ஹெர்யான்டோ அவர்களை ஊக்குவித்து வருகிறார்.

இம்முறை தென்கிழக்காசிய விளையாட்டுகளில் ஒற்றையர், இருவர், குழு, கலப்பு இரட்டையர் என நான்கு விதமாக டென்னிஸ் போட்டிகள் இடம்பெற உள்ளன.

1995 டிசம்பரில் தாய்லாந்தின் சியாங்மெய் நகரில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் ஆண்கள் ஒன்றையர் டென்னிஸ் போட்டியில் சிங்கப்பூர் வெண்கலப் பதக்கம் வென்றது.

குறிப்புச் சொற்கள்