முகக்கவசம் அணியாத மாது குற்றம் புரிந்ததாகத் தீர்ப்பு

வெளியிடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருந்த காலகட்டத்தில், ஆர்ச்சர்ட் சாலையில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த பூன் சியூ யோக் குற்றவாளி என வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

பூன் மீதான நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்று, ஆர்ச்சர்ட் சாலையில் முகக்கவசம் அணியாததற்கானவை.

கடந்த 2022 மார்ச் 6 அன்று, முகக்கவசம் அணியாமல் மேண்டரின் கேலரியில் நடந்து சென்றதற்காக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதே நாளில், முகக்கவசம் அணியாமல் விக்டோரியாஸ் சீக்ரட் கடையைக் கடந்து நடந்து சென்றதற்காக இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி, அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியில் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றதற்காக மூன்றாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பூன் முகக்கவசம் அணியாமல் நடந்துசென்றதைக் காணொளிச் சான்றுகள் தெளிவாகக் காட்டுவதாக மாவட்ட நீதிபதி டான் ஜென் சி கூறினார். முகக்கவசம் அணியாமல் இருந்ததற்கு பூனிடம் நியாயமான காரணம் எதும் இல்லை என்பதால் அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார்.

நீதிமன்ற விசாரணையின்போது தனது வாதத்தை முன்வைத்த 56 வயது பூன், “இந்தச் சம்பவத்தில் யாராவது பாதிப்படைந்தார்களா? நான் முகக்கவசம் அணியாததால் யாராவது கடுமையாகக் காயமடைந்தார்களா? நான் முகக்கவசம் அணியாததால் பெரும்பண இழப்புகள் ஏற்பட்டதா?” என்று கேட்டார்.

பூன் குற்றம் புரிந்த சமயத்தில், முகக்கவசம் அணியாதது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படக்கூடிய குற்றமாக இருந்ததாக அரசாங்கத் துணை வழக்கறிஞர் ஹீர்‌ஷன் கோர் கூறினார்.

முகக்கவசம் அணியத் தவறிய குற்றத்தின் தொடர்பில் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் விசாரணைக்கு அழைத்தபோது செல்லத் தவறியதற்கான மற்றொரு குற்றச்சாட்டையும் பூன் எதிர்நோக்கினார்.

பயணத்துறைக் கழகம் பூனுக்கு மூன்று வாய்ப்புகள் அளித்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தீர்‌ஷன் கோர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூர் கடற்படையில் 12 ஆண்டுகாலம் சேவைபுரிந்த பூன், இதற்கு முன்பும் முகக்கவசம் அணியத் தவறியிருக்கிறார். அந்தக் குற்றத்திற்காக 2021 செப்டம்பர் மாதம் அவருக்கு 16 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அந்தத் தண்டனைக்குப் பிறகு அவர் மீண்டும் அதே குற்றங்களைப் புரிந்ததால் மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. செப்டம்பர் 11ஆம் தேதி அவருக்கு தண்டனை விதிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!