வங்கியில் ரூ.590 கோடி மோசடி: ஒரே நாளில் ரூ.578 கோடி மீட்பு

வங்கியில் ரூ.590 கோடி மோசடி: ஒரே நாளில் ரூ.578 கோடி மீட்பு

1 mins read
520d25ed-2bf6-418c-b21b-051d06435db9
ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கிக் கிளையில் ஹரியானா அரசு சில கணக்குகளை வைத்துள்ளது. - படம்: த இந்தியன் எக்ஸ்பிரஸ்

சண்டிகர்: இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஐடிஎப்சி பர்ஸ்ட் (IDFC First) வங்கியில் ரூ.590 கோடி ($82 மில்லியன்) மோசடி செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பாக மேல்விவரங்கள் வெளியாகியுள்ளன.

மோசடிச் செய்தி வெளியான 24 மணி நேரத்துக்குள் ரூ.578 கோடி ($80 மில்லியன்) மீட்கப்பட்டது என்று ஹரியானா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி அந்த மாநிலச் சட்டமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) தெரிவித்தார்.

“வைப்புத் தொகையான ரூ.556 கோடி பணமும் அதன் வட்டிப் பணமான ரூ.22 கோடியும் மீட்கப்பட்டன. அந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் சட்டத்திடமிருந்து தப்ப முடியாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கிக் கிளையில் ஹரியானா அரசு சில கணக்குகளை வைத்துள்ளது. அந்தக் கணக்குகளிலிருந்து கிட்டத்தட்ட ரூ.590 கோடி அளவுக்கு முறைகேடு நடந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து வங்கி அதிகாரிகள் நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அதுகுறித்து ஆய்வு செய்ய ‘கேபிஎம்ஜி’ என்ற அனைத்துலக நிறுவனத்தின் தடயவியல் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஐடிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
வங்கிநிதி மோசடிவிசாரணை

தொடர்புடைய செய்திகள்