பிடோக் உணவங்காடி கடைக்காரர்களுக்கு வாடகை, பராமரிப்புக் கட்டணம் தள்ளுபடி

கட்டாய காசநோய் பரிசோதனை மே 8 வரை நீட்டிப்பு

பிடோக் உணவங்காடி கடைக்காரர்களுக்கு வாடகை, பராமரிப்புக் கட்டணம் தள்ளுபடி

2 mins read
c4339e10-6451-4bf7-a11a-ab69dcbe55f9
பிடோக் சென்ட்ரல், ஹார்ட்பீட்@பிடோக் பகுதியில் மூன்று இடங்கள் காசநோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து மே 4ஆம் தேதி அங்கு காசநோய் பரிசோதன நடத்தப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

https://www.straitstimes.com/singapore/health/bedok-hawkers-get-rent-and-conservancy-rebates-tb-screening-extended-to-may-8

பிடோக் சென்ட்ரல் பகுதியில் காசநோய் பாதிப்புக் குழுமங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு மே மாதத்திற்கான வாடகை, பராமரிப்புக் கட்டணத்தில் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

காசநோய் அச்சத்தால் அப்பகுதியில் மக்களின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளதால், நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 4ஆம் தேதி தொடங்கிய கட்டாய காசநோய் பரிசோதனை மே 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹார்ட்பீட்@பிடோக், புளோக் 261ல் உள்ள உணவு நிலையம் & சந்தை, சிங்கப்பூர் பூல்ஸ் கிளை ஆகிய இடங்களில் நீண்ட நேரம் செலவிட்ட கிட்டத்தட்ட 700 ஊழியர்கள், குத்தகைதாரர்களுக்கு இந்தப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுவரை 13 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், அவர்கள் உடனடியாக சிகிச்சை பெற்று வருவதால் தற்போது மற்றவர்களுக்குத் தொற்று பரவும் ஆபத்து இல்லை என்று தொற்றுநோய் அமைப்பு தெரிவித்துள்ளது.

வணிகர்களுக்கு ஆதரவாக, தேசிய சுற்றுப்புற வாரியம் அரை மாத வாடகைத் தள்ளுபடியையும், ஈஸ்ட் கோஸ்ட் நகர மன்றம் பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடியையும் வழங்கும் என்று அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.

“வாடிக்கையாளர்களின் வருகை குறைந்துள்ள நிலையில், இது நிதிச் சுமையைக் குறைக்க உதவும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அப்பகுதியில் தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அப்பகுதி வணிகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, ஆர்வமுள்ள பொதுமக்களும் சாட்டா (SATA) மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் கூறினார்.

2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 1,019 புதிய காசநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இது முந்தைய ஆண்டை விடக் குறைவு என்றாலும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பு நடவடிக்கையாகப் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்