‘பியாண்ட் சோசியல் சர்வீசஸ்’ பாலர் பள்ளி மூடல்

1 mins read
fc29b415-959e-4b2d-bafb-d0f73c2cb0d3
20 ஆண்டுக்கும் மேலாக இயங்கி வரும் ‘ஹெல்தி ஸ்டார்ட் சைல்டு டெவலெப்மண்ட் சென்டர்’ பாலர் பள்ளி, போதுமான மாணவர் சேர்ப்பு இல்லாததால் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘பியாண்ட் சோஷியல் சர்வீசஸ்’ பாலர் பள்ளி இவ்வாண்டு இறுதியில் மூடப்படுகிறது.

‘ஹெல்தி ஸ்டார்ட் சைல்டு டெவலெப்மண்ட் சென்டர்’ என்று அழைக்கப்படும் அப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு மற்ற பள்ளிகளில் இடம் கிடைத்துவிட்டது.

அந்தப் பாலர் பள்ளியில் சேர்ந்து பயிலும் 14 மாணவர்களில் ஆறு பேர் அப்பள்ளியிலேயே தங்கள் பாலர் பள்ளி கல்வியை முடிப்பர்.

எஞ்சிய எட்டு மாணவர்களில் ஏழு பேரில் சிலருக்கு மற்ற பாலர் பள்ளிகளில் இடம் கிடைத்துவிட்டது. சிலருக்கு பராமரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன.

இந்தத் தகவல்கள் வியாழக்கிழமை (நவம்பர் 13) வெளியிடப்பட்டன.

20 ஆண்டுக்கும் மேலாக இயங்கி வரும் ‘ஹெல்தி ஸ்டார்ட் சைல்டு டெவலெப்மண்ட் சென்டர்’ பாலர் பள்ளி, போதுமான மாணவர் சேர்ப்பு இல்லாததால் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டில் அந்தப் பள்ளியில் 50க்கும் அதிகமான மாணவர்கள் இருந்தனர். 2024ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 14ஆகக் குறைந்தது.

வீடமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாறியதால் அப்பள்ளியில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகச் சரிந்தது.

ஹெண்டர்சன், புக்கிட் மேரா ஆகிய குடியிருப்புப் பேட்டைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

அவ்வட்டாரங்களில் போதுமான குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் இல்லை என்று தெரியவந்தது. சிறைக்குச் செல்லும் பெற்றோர் இருப்பதும் கல்வியை முடிப்பதற்கு முன்பே பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக்கொள்ளும் மாணவர்கள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, 2002ஆம் ஆண்டில் ‘ஹெல்தி ஸ்டார்ட் சைல்டு டெவலெப்மண்ட் சென்டர்’ பாலர் பள்ளி திறக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்