தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் தென்கிழக்குக் கடற்கரை தடுப்பணைகள், அலைவாயில் பாதுகாப்பு

3 mins read
27c5b5d6-8f96-49a9-a1fb-9438c0a20a28
செந்தோசாவிற்கும் புலாவ் பிரானிக்கும் இடையே மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பையும் வழங்கும் சாத்தியமான கடலோரத் தடுப்பணையின் ஒரு கலைஞரின் கற்பனைப் படம். - படம்: பொதுப் பயனீட்டுக் கழகம்

சிங்கப்பூரின் தாழ்வான பகுதிகளில் ஒன்றான தென்கிழக்குக் கடற்கரையில் கடல்மட்ட உயர்விலிருந்து மக்களையும், உள்கட்டமைப்புகளையும் பாதுகாக்க 2030ஆம் ஆண்டு முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

வானிலையைப் பொறுத்து திறக்கவோ மூடவோ கூடிய, கைகள் போன்ற நகரக்கூடிய தடுப்புவாயில்களை செந்தோசாவுடன் இணைப்பது, சாங்கி கடற்கரைப் பகுதியில் உயர்த்தப்பட்ட மேடைகளை அமைப்பது போன்றவவை அந்த நடவடிக்கைகளில் உள்ளடங்கும்.

விவோசிட்டி கடைத்தொகுதியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) கடற்நடைபெற்ற நாட்டின் முதல் கடலோரப் பாதுகாப்புக் கண்காட்சியில் முன்மொழியப்பட்ட தீர்வுகளில் இவையும் அடங்கும்.

கண்காட்சியைப் பார்வையிட்ட துணைப் பிரதமர் கான் கிம் யோங், “கடலோரப் பாதுகாப்பு என்பது, நமது பொது வீட்டுவசதி, நீர் மற்றும் உள்கட்டமைப்பு போன்றே, பல தலைமுறைகளுக்கும் நீடித்த முயற்சி தேவைப்படும் ஒன்றாகும். நமது நாட்டின் பாதுகாப்பு, உறுதிப்பாடு, மீள்திறன் ஆகியவற்றுக்கான மிக அவசிய முதலீடு அது,” என்றும் அவர், அந்த இரு நாள் கண்காட்சியின்போது கூறினார்.

சிட்டி-ஈஸ்ட் கோஸ்ட்பகுதியில் நான்கு ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய நீர்வள அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகம் (PUB) கண்காட்சியின்வழி அந்நடவடிக்கைகளை முன்மொழிந்தது. 

2021ல் உள்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனமான சிபிஜி கன்சல்டன்ட்ஸ் இந்த ஆய்வைத் தொடங்கியது. 

இந்தக் கடற்கரைப் பகுதி, பாசிர் பாஞ்சாங் படகுத் துறைமுகத்திலிருந்து வருங்காலத்தில் ‘கிரேட்டர் சவுதர்ன் வாட்டர்ஃபிரண்ட்’ ( Greater Southern Waterfront)  பகுதி மற்றும் சாங்கி வரையிலும் பரவியுள்ளது.

300 கிலோமீட்டர்க்கும் அதிக நீளமான இந்தக் கடற்கரையைப் பாதுகாப்பதற்கான பொருத்தமான வழிகளைக் கண்டறிய பொதுப் பயனீட்டுக் கழகம் பிரித்துள்ள எட்டுப் பிரிவுகளில் இதுவும் ஒன்று.

சிட்டி-ஈஸ்ட் கோஸ்ட் பகுதி, அதன் தாழ்வான நிலப்பரப்பு காரணமாக முதல் சிறப்பிட ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பெரும்பகுதி தற்போது ஐந்து மீட்டருக்கும் குறைவாகவே கடல் மட்டத்துக்கு மேலே உள்ளது.

2100ஆம் ஆண்டிற்குள், சிங்கப்பூரைச் சுற்றியுள்ள சராசரி கடல் மட்டம் 1.15 மீட்டர் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கிரேட்டர் சவுதர்ன் வாட்டர்ஃபிரண்ட்’ க்கும் சாங்கிக்கும் இடையிலான பகுதி, முன்னர் அறிவிக்கப்பட்ட லாங் ஐலண்ட் மூலம் பாதுகாக்கப்படும்.

‘லாங் ஐலண்ட்’ (Long Island), கிழக்குக் கடற்கரைப்குதியில் அதிக உயரத்திற்கு மீட்கப்பட்ட மூன்று நிலப்பகுதிகளாகக் கருதப்படுகிறது. இது மரினா கிழக்கிலிருந்து தானா மேரா படகுத் துறைமுகம் வரை, சிட்டி-ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையின் பெரும்பகுதியைக் கடல் மட்ட உயர்விலிருந்து பாதுகாக்கும்.

‘கிரேட்டர் சவுதர்ன் வாட்டர்ஃபிரண்ட்’, சாங்கியின் மற்ற பகுதிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் கடல் சுவர்களை அமைத்தல், கடற்கரை சரிவுகளை உயர்த்துதல், அலைவாயில்களைக் கட்டுதல் ஆகியவை உள்ளடங்கும்.

கால்வாய் வெளியேறும் இடங்களில் கட்டப்படும் அலைவாயில்கள், அலைகள் அதிகமாக இருக்கும்போதும் தீவிர கடலோர வானிலை நிலவும்போதும் கடல் நீரை உள்ளே வரவிடாமல் மூடப்படும்.

ஒவ்வொரு கடற்கரைப் பகுதியின் சிறப்புத் தன்மைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இந்தத் தீர்வுகள், பாசிர் பாஞ்சாங் படகுத் துறைமுகத்திலிருந்து சாங்கி கடற்கரை வரை தொடர்ச்சியான பாதுகாப்புச் சங்கிலியை உருவாக்கும்.

“பரபரப்பான மரினா பே பகுதியிலிருந்து விரிகுடாவிலிருந்து அமைதியான சாங்கி கடற்கரைப் பூங்கா வரை நமது கடற்கரையின் ஒவ்வொரு பகுதியும் மாறுபட்டது . ஒவ்வொரு கடலோரப் பகுதிக்கும் அதன் சொந்த நிலவியல், தனித்துவமான பயன்பாடுகள் போன்றவை உள்ளன,” என்று வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு. கான் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்