உக்ரேனுக்கு 650 வான் தற்காப்பு ஏவுகணைகளை அனுப்பிவைக்கும் பிரிட்டன்

உக்ரேனுக்கு 650 வான் தற்காப்பு ஏவுகணைகளை அனுப்பிவைக்கும் பிரிட்டன்

1 mins read
276c0c84-5e62-49c6-98ee-15d53af24dc4
ரஷ்யா பாய்ச்சிய ஏவுகணை உக்ரேனின் ராணுவத் தொடர்பு நிலையம் ஒன்றைத் தகர்த்தது. - படம்: ஏஎஃப்பி

லண்டன்: உக்ரேனுக்கு 650 வான் தற்காப்பு ஏவுகணைகளை அனுப்பிவைக்க இருப்பதாக செப்டம்பர் 6ஆம் தேதியன்று பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியது.

அவற்றின் மொத்த மதிப்பு 162 மில்லியன் பவுண்டு (S$277 மில்லியன்).

உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உக்ரேனுக்கு இந்த ஏவுகணைகளை அனுப்பிவைப்பதாகவும் பிரிட்டன் கூறியது.

ரஷ்யா-உக்ரேன் போர் 2022ஆம் ஆண்டில் தொடங்கியது.

இந்நிலையில், ஆகத் தீவிரமான வான்வழித் தாக்குதலை ரஷ்யா கடந்த வாரம் நடத்தியது.

இதில் உக்ரேன் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கூடுதல் உதவி தேவை என்று அது உலக நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்தது.

ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று உக்ரேன் மீது ரஷ்யா 200க்கும் அதிகமான ஏவுகணைகளைப் பாய்ச்சியது.

இதில் ஏழு பேர் மாண்டனர்.

அதுமட்டுமல்லாது, உக்ரேனில் உள்ள பல எரிசக்தி நிலையங்கள் சேதமடைந்தன.

குறிப்புச் சொற்கள்