சிங்கப்பூர் ஆயுதப்படையின் சிறப்புப் படையை புருணை இளவரசர் பார்வையிட்டார்

சிங்கப்பூர் ஆயுதப்படையின் சிறப்புப் படையை புருணை இளவரசர் பார்வையிட்டார்

1 of 3
படம்: தற்காப்பு அமைச்சு
படம்: தற்காப்பு அமைச்சு
படம்: தற்காப்பு அமைச்சு

23 Oct 2026 - 10:01 pm

1 mins read

சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ வருகையளித்துள்ள புருணை இளவரசர் அப்துல் மதீன், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) சிங்கப்பூர் ஆயுதப்படையின் சிறப்புச் செயல்பாட்டுப் பணிப் படையைப் பார்வையிட்டார்.

சிறப்புச் செயல்பாட்டுப் பணிப் படை மற்றும் சிறப்புச் செயல்பாட்டு விமானப் பணிப் படை மூலம் சிங்கப்பூர் ஆயுதப் படையின் சிறப்புச் செயல்பாட்டுத் திறன்கள் குறித்து இளவரசருக்கு விளக்கமளிக்கப்பட்டதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புருணை இளவரசர் தமது வருகையின்போது, பயங்கரவாத எதிர்ப்புச் சூழலின்போது சிறப்புச் செயல்பாட்டுப் பணிப் படை வீரர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதைக் கவனித்தார்.

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் ‘எச்225எம்’ ஹெலிகாப்டரிலும் அவர் பறந்தார் என்று அமைச்சு மேலும் குறிப்பிட்டது.

தற்காப்பு மூத்த துணை அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சருமான ஸாக்கி முகம்மது புருணை இளவரசரை உபசரித்தார்.

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில் புதன்கிழமை (அக்டோபர் 21) சிங்கப்பூர் வந்த இளவரசர் வெள்ளிக்கிழமை வரை இங்கு இருந்தார்.

ஜூன் மாதம் புருணையின் வெளியுறவு அமைச்சரான பிறகு சிங்கப்பூருக்கு அவர் மேற்கொண்ட முதல் அதிகாரபூர்வ வருகை இதுவாகும்.

குறிப்புச் சொற்கள்