தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பட்ஜெட் 2025 சிறப்பம்சங்கள்

1 mins read
2b127d31-c92b-484f-97f2-4a0b293064d8
நாடாளுமன்றத்தில் 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றும் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

குடும்பங்களுக்கு ஆதரவு

♦ குடும்பங்களுக்கு இரு தவணைகளாக $800 சிடிசி பற்றுச்சீட்டு

♦ வீவக வீடுகளில் வசிப்போருக்கு $440 முதல் $760 வரை யு-சேவ் கட்டணக்கழிவு

♦ 12 வயதிற்குட்பட்ட சிங்கப்பூர்ப் பிள்ளைகளுக்கு $500 LifeSG சிறப்புத்தொகை

♦ 13 முதல் 20 வயதிற்குட்பட்ட சிங்கப்பூர்ப் பிள்ளைகளுக்கு $500 நிரப்புதொகை

♦ முழுநேரக் குழந்தைப் பராமரிப்புக் கட்டணம் குறைப்பு

♦ பெரிய குடும்பங்களுக்கான ஆதரவுத் திட்டத்தின்கீழ் பல்வேறு உதவிகள்

♦ 55 முதல் 70 வயதிற்குட்பட்ட, தகுதியுள்ள மூத்தோருக்கு வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையிலான மெடிசேவ் இணை நிதித் திட்டம்

♦ $400 பருவநிலைப் பற்றுச்சீட்டு

எஸ்ஜி60 ஆதரவுத் தொகுப்பு

♦ எஸ்ஜி60 பற்றுச்சீட்டு: 21 முதல் 59 வயதிற்குட்பட்டோர்க்கு - $600, 60 மற்றும் அதற்குமேல் வயதுடையோருக்கு $800

♦ 60% வருமான வரிக்கழிவு (அதிகபட்சம் $200)

♦ 2025ஆம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு எஸ்ஜி60 குழந்தை அன்பளிப்பு

தொழில்துறை

♦ நிறுவனங்களுக்கு 50% வருமான வரிக்கழிவு

♦ தேசிய உற்பத்தித்திறன் நிதிக்கு மேலும் $3 பில்லியன்

♦ வேலை மறுவடிவமைப்பு முயற்சிகளுக்கு 70% நிதியாதரவு

♦ நிறுவன ஆய்வு, உருவாக்க உள்கட்டமைப்பில் $1 பில்லியன் முதலீடு

♦ படிப்படியான சம்பள உதவித்தொகைக்கான இணைநிதிப் பங்களிப்பு அதிகரிப்பு

இதர முக்கிய அறிவிப்புகள்

♦ சாங்கி விமான நிலையத்தை மேம்படுத்த $5 பில்லியன்

♦ எதிர்கால எரிசக்தி நிதிக்கு $5 பில்லியன்

♦ கடலோர, வெள்ளப் பாதுகாப்பு நிதிக்கு $5 பில்லியன்

குறிப்புச் சொற்கள்