தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரவுசெலவுத் திட்டம் 2025 விருப்பப் பட்டியல்: கூடுதல் நிதி உதவிக்கு அழைப்பு

2 mins read
065e9e50-87fa-485e-8df0-c8d8a8994ace
கட்டங்கட்டமாக உயர்த்தப்படும் சம்பள முறை, தகுதிபெறும் உள்ளூர்ச் சம்பளத்துக்கு அண்மையில் செய்யப்பட்ட அதிகரிப்புகள் ஆகியவற்றின் மூலம் குறைந்த வருமான ஊழியர்களின் ஆற்றல்களை வளர்க்க, அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் வரவேற்கப்படுகின்றன.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்கம் அதன் வரவுசெலவுத் திட்டம் 2025 விருப்பப் பட்டியலில், வர்த்தகங்களுக்குத் தொடர் நிதி நிவாரணம் அளித்து, தற்போதுள்ள சம்பள உதவித்தொகைத் திட்டங்களை நீட்டிக்க வேண்டும் என்று சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

நிறுவன வருமான வரி, வாடகைச் சலுகைகள், தொழில்நிறுவன நிதித் திட்டம் ஆகியவற்றின் மூலம் நிதி நிவாரணம் வழங்கப்படலாம் என்று சம்மேளனம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) கூறியது.

“இந்த நடவடிக்கைகள் வரவிருக்கும் காலத்தில் செலவு நெருக்கடிகளைக் குறைத்து, வர்த்தகங்கள் நீண்டகால உத்திபூர்வ ஆற்றல்களில் மூதலீடு செய்ய வகை செய்யும். அதன் மூலம், அவற்றின் உற்பத்தித்திறன் மேலும் அதிகரிக்கும்; அவற்றால் ஊழியர்களுக்கான மேம்பட்ட சம்பள உயர்வை ஆதரிக்க முடியும்,” என்று சம்மேளனம் தெரிவித்தது.

கட்டங்கட்டமாக உயர்த்தப்படும் சம்பள முறை, தகுதிபெறும் உள்ளூர்ச் சம்பளத்துக்கு அண்மையில் செய்யப்பட்ட அதிகரிப்புகள் ஆகியவற்றின் மூலம் குறைந்த வருமான ஊழியர்களின் ஆற்றல்களை வளர்க்க, அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் வரவேற்கப்படுகின்றன.

இருந்தபோதும், சம்பள உயர்வுகள் நீடித்து நிலைத்திருக்க உற்பத்தித்திறன் வளர்ச்சி தேவை என்று சம்மேளனம் கூறியது.

கட்டங்கட்டமாக உயர்த்தப்படும் சம்பள முறை, தகுதிபெறும் உள்ளூர்ச் சம்பளம் ஆகியவற்றுக்கான செலவுத் தாக்கத்தைக் குறைக்க உதவ, கட்டங்கட்டமாக உயர்த்தப்படும் சம்பள உதவித்தொகைத் திட்டம் மேம்படுத்தப்படவேண்டும் என்றும் அது 2026ஆம் ஆண்டைத் தாண்டி நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் சம்மேளனம் கேட்டுக்கொண்டது.

பயிற்சிபெறும் ஊழியர்களுக்கான முதலாளிகளின் செலவுகளை ஈடுகட்ட உதவ, ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொழில் நிறுவன உதவி நிதி’ அல்லது அது போன்ற திட்டம் மூலம் தொடர் நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் சம்மேளனம் கேட்டுக்கொண்டது.

அதோடு, வர்த்தகங்கள் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துவதை ஊக்குவிக்க, ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சித் தொடரின்’கீழ் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சிகளுக்குக் கூடுதல் நிதியுதவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

மூத்த ஊழியர்களுக்கு ஆதரவளிக்க, மூத்த ஊழியருக்கான வேலை நியமன உதவித்தொகை 2025ஆம் ஆண்டைத் தாண்டி நீட்டிக்கப்பட வேண்டும் என்று சம்மேளனம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
அழைப்புவரவுசெலவுத் திட்டம்உதவித்தொகைபட்ஜெட் 2025