பிப்ரவரி 12 பிற்பகல் 3.30 மணிக்கு வரவுசெலவுத் திட்ட அறிக்கை தாக்கல்

பிப்ரவரி 12 பிற்பகல் 3.30 மணிக்கு வரவுசெலவுத் திட்ட அறிக்கை தாக்கல்

1 mins read
775fac9e-4b03-411e-8d21-3468bd9a6f96
பிரதமர் லார்ன்ஸ் வோங்.  - கோப்புப் படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

வரும் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்வார்.

2026 வரவுசெலவுத் திட்ட உரை, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் யூடியூப்வழி இயங்கும் நாடாளுமன்ற நேரலைப் பக்கம் (go.gov.sg/budget2026live), மீடியாகார்ப் மற்றும் எஸ்பிஎச் மீடியாவின் தளங்கள், பிரதமரின் யூடியூப் ஒளிவழி ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

நிதி அமைச்சின் சமூக ஊடகத் தளங்களிலும் வரவுசெலவுத் திட்ட உரை குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

பொதுமக்கள் நிதி அமைச்சின் வரவுசெலத் திட்ட உரைக்கான இணையத்தளத்துக்குச் (www.singaporebudget.gov.sg/email-subscription) சென்றுப் பதிவுசெய்துகொண்டு (subscribe) வரவுசெலவுத் திட்ட உரை நிறைவடைந்த பிறகு அதனை மின்னஞ்சல்வழி முழுமையாகப் பெற்றுக்கொள்ளலாம்.

வரவுசெலவுத் திட்ட உரை நிறைவடைந்த பிறகு அதனை www.singaporebudget.gov.sg என்ற இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்