தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பாத்தோக்கில் தீப்பிடித்த கார்; யாருக்கும் காயமில்லை

1 mins read
b7f8318b-9f1e-4d02-8f6e-32fbae59ee02
காரின் இயந்திரத்தில் தீ மூண்டதாகக் கூறப்பட்டது. - படம்: ஃபுவாட் ஓடெம்/ஃபேஸ்புக் காணொளி

புக்கிட் பாத்தோக்கில் ஞாயிற்றுக்கிழமைப் (நவம்பர் 17) பிற்பகலில் கார் நிறுத்துமிடத்தில் நின்றிருந்த கார் தீப்பற்றி எரிந்தது.

அது திறந்தவெளிக் கார் நிறுத்துமிடம் என்று தெரிகிறது.

புளோக் 239 புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 5ன் கார் நிறுத்துமிடத்தில் நடந்த சம்பவம் குறித்துப் பிற்பகல் 12.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

காரின் இயந்திரத்தில் தீ மூண்டதாகவும் அது குறிப்பிட்டது.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.

தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைக்க முயல்வது அக்காணொளியில் தெரிகிறது.

காரின் முன்பகுதி மோசமாகச் சேதமடைந்திருப்பதைக் காணொளி காட்டுகிறது.

சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று கூறிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, தீ மூண்டதற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்வதாகத் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்