மாணவர் எண்ணிக்கை சரிந்ததால் புக்கிட் மேராவில் பாலர் பள்ளி மூடல்

1 mins read
cf21f866-bf2e-425d-8bd2-e0c00b6295f3
பாலர் பள்ளியை நடத்தி வரும் ‘பியாண்ட சோசியல் சர்விசஸ்’ அமைப்பின் அலுவலகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் மேராவில் குறைந்த வருமானக் குடும்பத்தினரின் குழந்தைகளுக்குக் கல்விச் சேவை வழங்கி வரும் பாலர் பள்ளி ஒன்று ஆண்டிறுதிக்குள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

‘த ஹெல்த்தி ஸ்டார்ட் சைல்ட் டெவலப்மண்ட்6 (HSCDC) என்னும் அந்தப் பள்ளியை ‘பியாண்ட சோசியல் சர்விசஸ்’ (பிஎஸ்எஸ் - BSS) அமைப்பு நடத்தி வருகிறது.

ஏறத்தாழ 20 ஆண்டுகளாக இயங்கி வரும் அந்தப் பாலர் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிவடைந்ததால் அதனை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிஎஸ்எஸ் தெரிவித்து உள்ளது.

2018ஆம் ஆண்டு அந்தப் பாலர் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்த நிலையில் 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 14க்குக் குறைந்ததாகவும் அது கூறியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு அந்தப் பாலர் பள்ளியில் பயின்று வந்த மேகன் கங் எனப்படும் நான்கு வயதுக் குழந்தை அதன் தாயாராலும் தாயாரின் நண்பராலும் கொடுமைக்கு ஆளாகி இறந்தது.

பள்ளிக்கூடத்திற்கு வந்தபோது உடலில் காயங்கள் இருந்ததால் அந்தக் குழந்தைக்கு பள்ளி ஆசிரியர்களும் சமூக ஊழியர்களும் உதவ முயன்றனர்.

மேகனின் தாயார் ஃபூ லி பிங்கிற்குக் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி 19 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது ஆண் நண்பரான வோங் ஷி ஸியாங்கிற்கு 30 ஆண்டு சிறைத் தண்டனையும் 17 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்