நீல நிறமாக மாறிய புக்கிட் தீமா கால்வாய் நீர்

நீல நிறமாக மாறிய புக்கிட் தீமா கால்வாய் நீர்

1 mins read
பொதுப் பயனீட்டுக் கழகம் நிலைமையைக் கண்காணித்து வருகிறது
b2ce91b3-e727-48b1-8306-23663b9bc822
புக்கிட் தீமா கால்வாய் ஒன்றில் இருந்த நீர் நீல நிறத்தில் காணப்பட்டதை ஸ்டோம்ப் வாசகர் ஒருவர் காணொளி பதிவு செய்து அனுப்பியுள்ளார். - படங்கள்: ஸ்டோம்ப்

புக்கிட் தீமாவிலுள்ள கால்வாய் ஒன்றில், தண்ணீர் இயற்கைக்கு மாறாக நீல நிறமாக மாறிய சம்பவம் ஜனவரி 23ஆம் தேதி நடந்ததாக ஸ்டோம்ப் தளத்திற்கு வாசகர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

லாசியா அவென்யூ, சிக்ஸ்த் அவென்யூ அருகில் உள்ள கால்வாயில் தண்ணீர் ‘பளிச்’ நீல நிறத்தில் மாலை சுமார் 5.40 மணியளவில் இருந்ததைக் காட்டும் காணொளி ஒன்றை ஸ்டோம்ப் வாசகர் லாம் பகிர்ந்திருந்தார்.

“பொறுப்பற்ற வகையில் யாரோ கால்வாயில் இவ்வாறு மாசுபடுத்தும் திரவியங்களைக் கொட்டி இருக்கிறார். இதனால் இவ்வாறு நீல நிறமாகிவிட்டது,” என்றார் அவர்.

இந்நிலையில், பொதுப் பயனீட்டுக் கழகம் சோதனைகள் மேற்கொண்டதில் கூறப்பட்ட இடத்திலோ அருகிலோ இத்தகைய மாசுபாட்டிற்கான எந்த ஓர் அறிகுறியையும் கண்டறியவில்லை என்று தெரிவித்தது.

இருப்பினும் அடுத்த சில நாள்களுக்கு நிலைமையை அது கண்காணிக்கும் என்றும் குறிப்பிட்டது.

பொதுக் கால்வாய்களை இவ்வாறு மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவது சட்டவிரோதமாகும்.

இதற்கிடையே, கடந்த ஆண்டிலும் இதே காலகட்டத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்