விரைவுச்சாலையில் தீப்பிடித்த பேருந்து

விரைவுச்சாலையில் தீப்பிடித்த பேருந்து

1 mins read
4e2788ae-335f-4c40-9433-074d7e92119a
தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பாளர்கள் முயல்வதைக் காட்டும் படம் ஒன்று சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. - படம்: எஸ்ஜி ரோட் விஜிலாண்டே/ஃபேஸ்புக்

தெம்பனிஸ் விரைவுச்சாலையில் திங்கட்கிழமை (மார்ச் 30) காலை எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஒன்றில் திடீரென தீப்பிடித்தது.

அந்தச் சம்பவம் குறித்து தனக்கு காலை 6.50 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

தெம்பனிஸ் அவென்யூ 10க்கு அடுத்துள்ள சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிய தெம்பனிஸ் விரைவுச்சாலையில் (TPE) தீயில் சிக்கிய பேருந்துமீது அந்தப் படையின் வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். பேருந்தின் இயந்திரப் பகுதியில் எரிந்த தீயை அவர்கள் அணைத்தனர். அது ஒரு மின்சாரப் பேருந்து என்பது பின்னர் தெரியவந்தது.

தீயணைப்பாளர்கள் பேருந்தின் தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதைக் காட்டும் படம் ஒன்று சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.

அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது. மேல் விவரங்களை அறிய எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்துடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் தொடர்புகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்