விபத்துக்குள்ளான பேருந்துகள்; மருத்துவமனையில் பயணி

1 mins read
5c70603d-97db-4e0b-91e4-006b203b81ea
ஹில் ஸ்திரீட்டை நோக்கிச் செல்லும் விக்டோரியா ஸ்திரீட்டில் இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளானதாக ஜனவரி 6ஆம் தேதி காலை 7.55 மணிக்குத் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை தெரிவித்தது. - படம்: டிக் டாக்

பூகிஸ் ஜங்ஷன் அருகில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) சாலை விபத்து நிகழ்ந்தது.

இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளாகின.

இதில் பயணி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஹில் ஸ்திரீட்டை நோக்கிச் செல்லும் விக்டோரியா ஸ்திரீட்டில் இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளானதாகக் காலை 7.55 மணிக்குத் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை தெரிவித்தது.

47 வயது பேருந்து ஓட்டுநர் விசாரணையில் உதவுவதாக அது கூறியது.

66 வயது பயணி ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.

பாதிப்படைந்த பயணியின் நலனுக்கு முன்னுரிமை வழங்குவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் கூறியது.

விபத்து காரணமாக ஏற்பட்ட அசௌகரியத்துக்குப் பயணிகளிடம் அது மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்