தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பைட்டான்ஸ் நச்சுணவு: உணவில் கிருமிகள் இருந்தன

2 mins read
8d91652f-0a64-4290-a575-82f90a7e2c12
பைட்டான்ஸ் நிறுவனத்தில் 100க்கும் அதிகமானோர் நச்சுணவால் பாதிக்கப்பட்டதன் தொடர்பில் உணவு விநியோகம் செய்த யுன் ஹாய் யாவ் நிறுவனம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பைட்டான்ஸ் நச்சுணவு சம்பவம் தொடர்பில் யுன் ஹாய் யாவ் உணவுத் தொடர் நிறுவனம் ஜுன் 4ஆம் தேதி நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது. நிறுவனம் விநியோகித்த உணவால் கடந்த ஆண்டு 169 பேர் பாதிக்கப்பட்டனர்.

2024, ஜூலை 30ஆம் தேதி ஒன் ராஃபிள்ஸ் கீயில் உள்ள பைட்டான்ஸ் அலுவலகத்திற்கு விநியோகம் செய்யப்படும் கோழி உணவில் கிருமிகள் கண்டறியப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

நார்த் பாயிண்ட் சிட்டியில் உள்ள யுன் ஹாய் யாவ் நிறுவன வளாகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி பத்துக்கும் அதிகமான உயிருள்ள கரப்பான்பூச்சிகள் காணப்பட்டதாகவும் கூறப்பட்டது.

யுன் நான்ஸ் என்று பரவலாக அழைக்கப்படும் உணவு நிறுவனம் சீனாவைச் சேர்ந்தது. அதன்மீது உணவு விற்பனைச் சட்டம், சுற்றுப்புறப் பொது சுகாதார விதிமுறைகள் ஆகிய சட்டங்கள்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சிங்கப்பூர் உணவு ஆணைய வழக்கறிஞர் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் $5,000 அபராதம் விதிக்கப்படும்படி கேட்டுக்கொண்டார்.

யுன் ஹாய் யாவ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையானார். நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருப்பதாகவும் வழக்கறிஞரை நாட விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிறுவனம் ஜூலை 2ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி, பைட்டான்ஸ் நிறுவனத்தில் 169 பேர் நச்சுணவால் பாதிக்கப்பட்டதை அடுத்து யுன் ஹாய் யாவ் உணவு விநியோக நிறுவனமும் பு தியென் சேவைகளும் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் 17 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி பு தியென் சேவைகள் அதன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க சிங்கப்பூர் உணவு அமைப்பு ஒப்புதல் வழங்கியது.

வளாகத்தைச் சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதை அடுத்து யுன் ஹாய் யாவ்வின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க ஆகஸ்ட் 16ஆம் அனுமதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்