தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சிகரெட் விதிமுறைகளைத் தெளிவாக்க முதலாளிகளுக்கு அமைச்சு அறிவுறுத்தல்

1 mins read
35c33a19-a7a8-4c5c-be01-060c4dcee929
மின்சிகரெட் பிடிப்போருக்கு அருகில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று மவுண்ட் எலிசபத் மருத்துவமனை கூறியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சிகரெட்டிலிருந்து வெளியேறும் புகையால் அருகில் உள்ளவர்கள் பாதிக்கப்படக்கூடும் என்று மவுண்ட் எலிசபத் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

புகைபிடிப்போருக்கு அருகில் இருந்தால் ஏற்படும் பாதிப்பைப் போல மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோருக்கு அருகில் உள்ளோர் பாதிக்கப்படலாம் என்று அறிக்கை குறிப்பிட்டது.

மின்சிகரெட்டிலிருந்து வெளியேறும் புகையில் நிக்கட்டின், இரும்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய துகள்கள் இருப்பதாக ஆய்வுகள் சுட்டுகின்றன.

சட்டவிரோதமாக இருந்தாலும் சிங்கப்பூரில் பரவலாகக் காணப்படும் மின்சிகரெட் பயன்பாடு குறித்து வேலையிடங்களில் கவலை எழுந்துள்ளது.

மின்சிகரெட்டில் உள்ள கேடால் புகையிலைச் சட்டத்தின்கீழ் குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

“மின்சிகரெட் பயன்பாடு குறித்து அந்தந்த நிறுவனங்கள் தனிப்பட்ட கொள்கைகளை உருவாக்கிக்கொள்ளும்படி மனிதவள அமைச்சு அறிவுறுத்துகிறது. மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோர்மீது நிறுவனங்கள் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கலாம்,” என்று மனிதவள அமைச்சு பேச்சாளர் குறிப்பிட்டார். ஒருசில அமைப்புகள் ஏற்கெனவே அத்தகைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன.

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான சங்கம், மின்சிகரெட் பழக்கத்தைக் கட்டுபடுத்த கூடுதல் நிறுவனங்கள் முயல்வதாகக் குறிப்பிட்டது. அந்த விவகாரம் தொடர்பில் இன்னும் தெளிவான வழிகாட்டல் தேவை என்று உறுப்பினர்கள் கேட்டுள்ளதைச் சங்கம் பகிர்ந்துகொண்டது.

பல ஆலோசனைகளுக்குப் பிறகும் மின்சிகரெட்டைத் தொடர்ந்து பயன்படுத்தும் ஊழியர்களை எவ்வாறு கையாள்வது போன்ற கேள்விகளை ஒருசில நிறுவனங்கள் முன்வைத்ததாக சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் தெரிவித்தது.

பலமுறை அறிவுறுத்தியும் தொடர்ந்து மின்சிகரெட்டைப் பயன்படுத்துவோரை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யக்கூடும் என்று சம்மேளனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்