சிங்கப்பூரின் $900 மில்லியன் நொறுக்குத்தீனிச் சந்தையில் கம்போடியா கவனம்

சிங்கப்பூரின் $900 மில்லியன் நொறுக்குத்தீனிச் சந்தையில் கம்போடியா கவனம்

படம்: கிரிபோஸ்ட்

07 Nov 2026 - 2:40 pm

1 mins read

சிங்கப்பூரில் சத்துமிக்க, ஆரோக்கியமான உணவு வகைகளுக்கான பயனீட்டாளர் தேவை அதிகரித்து வரும் வேளையில், பெரும் வருவாய் ஈட்டித் தரும் சிங்கப்பூரின் நொறுக்குத்தீனிச் சந்தையைக் கம்போடிய உணவு உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் நொறுக்குத்தீனித் தொழில்துறையின் மதிப்பு 2024ஆம் ஆண்டில் தோராயமாக $900 மில்லியனாக இருந்தது என்றும் அங்கு பயனீட்டாளர்கள் ஆண்டுக்குச் சராசரியாக தலா $120 வரை இதற்குச் செலவிடுகின்றனர் என்றும் அவ்வமைப்பின் அனைத்துலக ஒத்துழைப்பு, வர்த்தகப் பங்காளித்துவப் பிரிவின் இயக்குநர் விக்டர் லீ குறிப்பிட்டார்.

கம்போடிய ஏற்றுமதியாளர்களுக்கான வாய்ப்புகள் குறித்து பேசிய அவர், உலர் பழங்கள், பிற சத்துமிக்க நொறுக்குத்தீனி வகைகள் சிங்கப்பூர் பயனீட்டாளரைக் கவரக்கூடும் என்று சுட்டிக்காட்டினார்.

இந்த வாய்ப்பு மூலப்பொருள்களான விவசாயப் பொருள்களை ஏற்றுமதி செய்வதோடு நின்றுவிடாமல், அதிக மதிப்புமிக்க தயாரிப்புகளை வழங்கும் ஆற்றல் கொண்ட வலுவான உணவுப் பதப்படுத்தும் தொழில்துறையைக் கட்டமைக்கவும் கம்போடியாவுக்கு உதவும்.

அனைத்துலகச் சந்தைகளில் போட்டியிட கம்போடியா தனது உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளையும் பதப்படுத்தும் திறனையும் மேம்படுத்த வேண்டும் என்று கம்போடியாவின் தொழில், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர் ஹெம் வாண்டி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்