கம்போடிய மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய ஏழாவது நபர்மீது குற்றச்சாட்டு

கம்போடிய மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய ஏழாவது நபர்மீது குற்றச்சாட்டு

படம்: சிங்கப்பூர் காவல்துறை

10 Nov 2026 - 3:46 pm

1 mins read

கம்போடியாவைத் தளமாகக் கொண்டு சிங்கப்பூரர்களைக் குறிவைத்துச் செயல்பட்ட மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய ஏழாவது நபர்மீது நவம்பர் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

அரசாங்க அதிகாரிகள்போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகளில் இந்தக் கும்பல் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. குறைந்தது 528 மோசடிச் சம்பவங்களுடன் தொடர்புடைய இக்கும்பலால் ஏறக்குறைய $53 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

சிங்கப்பூரரான 27 வயது லாம் யோங் யான்மீது, கடுமையான குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரரான 27 வயது லாம் யோங் யான்மீது, கடுமையான குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரரான 27 வயது லாம் யோங் யான்மீது, கடுமையான குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

2025 செப்டம்பரில் நோம் பென் நகரில் உள்ள மோசடி அழைப்பு மையத்தில் லாம் அழைப்பாளராகப் பணியாற்றியதாகக் குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. அவர் சிங்கப்பூரர்களை ஏமாற்றியதுடன் பிறரையும் அங்கு வேலைக்கு அழைத்துச் செல்ல உதவியதாகக் கூறப்படுகிறது.

குடிநுழைவுக் குற்றங்களுக்காக 2025 நவம்பர் 19ஆம் தேதி வியட்னாமில் கைதான லாம், சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்டு நவம்பர் 6ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

சிங்கப்பூர் சகோதரர்களான இங் வெய் லியாங், இங் வெய் காங், அவர்களின் உறவினர் லெஸ்டர் இங் ஜிங் ஹை ஆகிய மூவர் இக்கும்பலை வழிநடத்தியதாக நம்பப்படுகிறது.

சிங்கப்பூர், கம்போடியக் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையில் இக்கும்பல் முறியடிக்கப்பட்டது. இந்த மோசடிக் கும்பலைச் சேர்ந்த 29 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் லாமுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறையோ, அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இவ்வழக்கு நவம்பர் 13ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்