பாரகன் வர்த்தகக் கட்டடத்தை $3.9 பில்லியனுக்கு வாங்குகிறது கேப்பிட்டலேண்ட் டிரஸ்ட்

பாரகன் வர்த்தகக் கட்டடத்தை $3.9 பில்லியனுக்கு வாங்குகிறது கேப்பிட்டலேண்ட் டிரஸ்ட்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Apr 2026 - 6:09 pm

1 mins read

கேப்பிட்டலேண்ட் ஒருங்கிணைந்த வர்த்தக அறநிறுவனம், சிங்கப்பூரின் நிதி மையத்தில் தன்வசம் உள்ள பெரிய அலுவலகக் கட்டடத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் நிதியை ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள முதன்மை வர்த்தக வளாகத்தில் முதலீடு செய்கிறது.

இதன்மூலம் அந்த அறநிறுவனம் தனது சொத்துத் தொகுப்பை மறுசீரமைத்து வருகிறது. வருங்கால வளர்ச்சி தென்படும் சொத்தில் தனது முதலீட்டை அது மாற்றுவதையே இந்தப் பரிவர்த்தனை குறிக்கிறது.

ஆர்ச்சர்ட் ரோட்டில் அமைந்துள்ள பாரகன் வர்த்தக வளாகத்தை கஸ்கேடென் பீக் நிறுவனத்திடமிருந்து கிட்டத்தட்ட S$3.9 பில்லியனுக்கு வாங்கப்போவதாக அறநிறுவனம் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) அறிவித்தது.

அதனை வாங்கத் தேவைப்படும் நிதியின் ஒரு பகுதியைத் திரட்ட மரினா பே நிதி வட்டாரத்தில் உள்ள தனது ‘ஏஷியா ஸ்குவேர் டவர் 2’ என்னும் உயர்தர அலுவலகக் கட்டடத்தை விற்கப்போவதாகவும் அது கூறியது.

மலேசியாவைச் சேர்ந்த ஐஓஐ புரோப்பர்ட்டீஸ் நிறுவனத்திடம் அந்தக் கட்டடத்தை S$2.5 பில்லியனுக்கு அது விற்க உள்ளது.

ஆர்ச்சர்ட் ரோட்டில் முழு உரிமை கொண்ட சில்லறை வர்த்தக, மருத்துவ வளாகமான பாரகன் கட்டடத்தில் 190க்கும் மேற்பட்ட சில்லறை வர்த்தக நிறுவனங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
முதலீடுவிற்பனைகொள்முதல்