தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கார் ‘சிஓஇ’ கட்டணம் புதிய உச்சம்

1 mins read
9ce74142-f51b-483c-a79c-d05812ab1830
புதன்கிழமை நடந்த ஏலக்குத்தகையில், மோட்டார்சைக்கிள் தவிர்த்த மற்ற அனைத்துப் பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் கூடியது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய ஏலக்குத்தகையில், கார்கள் மற்றும் பொதுப் பிரிவு வாகனங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் (சிஓஇ) புதிய உச்சம் தொட்டன.

சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் முந்திய ஏலக்குத்தகையைவிட 3.96 விழுக்காடு அதிகரித்து $105,000 ஆனது.

பெரிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் 4.45 விழுக்காடு கூடி, $140,889-ஐ எட்டியது.

மோட்டார்சைக்கிள் தவிர்த்து, மற்ற எந்த வகை வாகனத்திற்கும் பயன்படுத்தக்கூடிய பொதுப் பிரிவு சிஓஇ கட்டணம், இதுவரை இல்லாத அளவுக்கு $144,640ஆக உயர்ந்தது. முந்திய ஏலக்குத்தகையில் முடிவடைந்த $137,000 விலையைவிட இது 5.58 விழுக்காடு அதிகம்.

வணிகப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம், 1.1 விழுக்காடு அதிகரித்து $83,801 ஆனது.

மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம் மட்டுமே புதன்கிழமை நடந்த ஏலக்குத்தகையில் குறைந்து $10,700 ஆனது. இது இரு வாரங்களுக்குமுன் இடம்பெற்ற முந்திய ஏலக்குத்தகையைவிட 1.84 விழுக்காடு குறைவு.

குறிப்புச் சொற்கள்