ரிவர்வேலி பகுதியில் சனிக்கிழமை (பிப்ரவரி 14) பிற்பகல் வாக்கில் ஏற்பட்ட சாலை விபத்தை அடுத்து நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
மார்டி சாலையில் நண்பகல் 12 மணிவாக்கில் சிங்கப்பூர் பெளத்த விடுதிக்கு வெளியில் விபத்து நேர்ந்தது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் இரண்டு தீயணைப்பு வாகனங்களும் பல்வேறு தீயணைப்பாளர்களும் சம்பவ இடத்தில் இருந்ததைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவின.
கவிழ்ந்த காரின் முன் பயணி இருக்கைக்கு அருகே தீயணைப்பாளர்கள் காணப்பட்டனர்.
காரை ஓட்டியவர் 68 வயது பெண் என்று கூறப்படுகிறது.
காரில் பயணம் செய்த மூன்று பயணிகள் 52 வயதிலிருந்து 73 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அறியப்படுகிறது. அவர்கள் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கார் சாலையில் சறுக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. கார் ஓட்டுநர் அதிகாரிகளின் விசாரணையில் உதவுகிறார்.
வாகனத்தின் முன் பயணி இருக்கையில் ஒருவர் சிக்கியிருந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மீட்புக் கருவிகளைக் கொண்டு பயணியை அதிகாரிகள் காரிலிருந்து வெளியே கொண்டுவந்தனர்.

