தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரிம ஊக்கப் புள்ளிகள் தளம்: கூட்டணி அமைத்த சிங்கப்பூர், கென்யா, பிரிட்டன்

1 mins read
1e0f4248-4cea-416d-9100-3da8c9224382
2050ஆம் ஆண்டுக்குள் கரிமச் சந்தை $320.5 பில்லியன் வரை விரிவடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

கரிம வெளியேற்றத்தைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக சிங்கப்பூர், பிரிட்டன், கென்யா ஆகியவை அரசாங்கக் கூட்டணி அமைத்துள்ளன.

இத்தகைய கூட்டணி அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) கூட்டணி அமைக்கப்பட்டது.

இந்த மூன்று நாடுகளிலும் உள்ள நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து கரிம ஊக்கப் புள்ளிகளை வாங்க ஊக்குவிக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாடுகளும் கூட்டணியின் முன்னோடிகள். கூட்டணியில் சேர மற்ற நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 24) பனாமாவும் பிரான்சும் கூட்டணியில் இணைந்தன.

2050ஆம் ஆண்டுக்குள் கரிமச் சந்தை $320.5 பில்லியன் வரை விரிவடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீடித்த நிலைத்தன்மை மேம்பாடு, விவசாயம், தூய எரிசக்தி, இயற்கை பராமரிப்பு, மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு இது ஆதரவு வழங்கக்கூடும்.

சிங்கப்பூர் போன்ற நாடுகள் அவற்றில் பருவநிலை இலக்குகளை எட்ட கரிம ஊக்கப் புள்ளிகளை வாங்கும்.

கென்யா போன்ற நாடுகள் கரிமத் திட்டங்களால் வழங்கப்பட்ட கரிம ஊக்கப் புள்ளிகளை விற்கலாம்.

இதுவரை கரிம ஊக்கப் புள்ளிகளை வாங்கும் 887 பேரை கென்யா ஈர்த்துள்ளது.

அதனிடம் 14.3 மில்லியன் டன் கரிமப் புள்ளிகள் உள்ளன.

அவற்றின் மதிப்பு ஏறத்தாழ 209 மில்லியன் அமெரிக்க டாலர்.

குறிப்புச் சொற்கள்