சிங்கப்பூர் வங்கி வாடிக்கையாளர்கள் இந்தோனீசியாவில் கியூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தலாம்

1 mins read
25af5c44-0d79-4274-afdd-fc4c9a3b4a39
பேநவ்-டூயிட்நவ் சேவையை லிக்விட் குழுமம், மேபேங்க் சிங்கப்பூர், ஓசிபிசி, யுஓபி ஆகியவற்றின் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். - படம்: சாவ் பாவ்

யுஓபி, ஓசிபிசி வங்கிகளில் கணக்கு வைத்துள்ளோர் இப்போது இந்தோனீசியாவில் கியூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தலாம்.

டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்களும் விரைவில் இவ்வசதியைப் பெறுவர்.

தாங்கள் வைத்துள்ள கைப்பேசி வங்கிச் செயலிகளைப் பயன்படுத்தி இந்தோனீசியாவின் கியூரிஸ் அல்லது நெட்ஸ் கியூஆர் குறியீடுகளை வருடி, பயனர்கள் முறையே இந்தோனீசியாவிலும் சிங்கப்பூரிலும் சில்லறை விற்பனைக் கடைகளில் பணம் செலுத்தலாம்.

அதேபோல, சிங்கப்பூரின் பேநவ் - மலேசியாவின் டூயிட்நவ் சேவை இணைப்பு மூலம் சிங்கப்பூர் - மலேசியா வங்கிக் கணக்குகளுக்கு இடையே எளிதில் பணப் பரிமாற்றம் செய்வதையும் சில வங்கிகள் அனுமதிக்கின்றன. இதன்மூலம் பணம் பெறுபவரின் கைப்பேசி எண் அல்லது மெய்நிகர் பணம் செலுத்தும் முகவரியை மட்டும் கொண்டு பயனர்கள் இரு நாடுகளுக்கு இடையே பணம் அனுப்பலாம்.

நவம்பர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடந்த சிங்கப்பூர் நிதித் தொழில்நுட்பத் திருவிழாவில் இந்த இரு சேவைகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகின.

முன்னதாக, ஓசிபிசி வங்கி தன் வாடிக்கையாளர்கள் மலேசியக் கடைகளில் டூயிட்நவ் குறியீடுகளை வருடி பணம் செலுத்தும் சேவையை இவ்வாண்டுத் தொடக்கத்தில் அறிமுகம் செய்தது.

குறிப்புச் சொற்கள்