தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் மேம்பாட்டுக்கான பேரணி

1 mins read
8350dd57-ad1d-4cff-a14a-119e7db8ba8a
ஒட்டுமொத்தமாக 400,000 வெள்ளியைத் திரட்டும் குறிக்கோள் ஈடேறியது. இந்தச் சிறுவன் பந்தை வலைக்குள் செலுத்த முயற்சி செய்கிறார். - படம்: மைண்ட்ஸ்

விளையாட்டு மூலம் அனைவரையும் ஒன்றுசேர்க்க முடியும் என்ற வலுவான செய்தியுடன் ‘மைண்ட்ஸ் கலர்’ சாக்ஸ் பேரணி எனும் நிகழ்ச்சி ஒன் பொங்கோல் கடைத்தொகுதியில் ஜூன் 28ஆம் தேதி நடைபெற்றது.

உடற்குறையுள்ளோருக்கான இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  

கற்றல் குறைபாடு உள்ளோர், கூடைப்பந்து விளையாட்டில் ஈடுபட்டு மகிழ்ந்தனர். 

அவர்களுடன் பொதுமக்களும் இணைந்து விளையாடுவதற்கு இந்த நிகழ்ச்சி வாய்ப்பு வழங்கியது. 

ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை நடைபெற்ற இந்த இயக்கத்திற்கு, உலக ‘டெளன் சிண்டரம்’ நாளையும் உலக மதியிறுக்க நாளையும் முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது.  

இளம் வயது முதல் உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றைப் பிற்காலத்தில் தவிர்க்கலாம்.

உடற்பயிற்சி செய்பவோரின் தன்னம்பிக்கை பெருகும். பிறருடன் பழகும் திறன்கள் மேம்படும்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்புத் தேவை உடையவர் அம்பு விடுவதற்குப் பயிற்றுவிப்பாளர் பயிற்சி அளிக்கிறார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்புத் தேவை உடையவர் அம்பு விடுவதற்குப் பயிற்றுவிப்பாளர் பயிற்சி அளிக்கிறார். - படம்: மைண்ட்ஸ்

சாதாரணமாக இருப்பவர்கள் மட்டுமன்றி மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த நன்மைகள் ஏற்பட வேண்டும் என்பது நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட பென்சன் ஆங், உருவத்தில் சிறியவராக இருந்தபோதும் பயிற்சி செய்து சிறந்த நீச்சல் வீரரானார். 

இன்று பென்சன் தம் நீச்சல் திறன்களைப் பயன்படுத்தி , சிங்கப்பூரிலுள்ள பல்வேறு அமைப்புகளுக்கு நிதி திரட்டுகிறார். 

‘எர்ன்ஸ் அண்ட யங்’ நிறுவனம், நன்கொடைகள், தொண்டூழியம் ஆகியவற்றின்வழி மைண்ட்ஸ் அமைப்புடன் நிலையான கூட்டுறவில் இணைந்துள்ளது. 

நிகழ்ச்சியில், 400,000 வெள்ளியைத் திரட்டும் குறிக்கோள் ஈடேறியது. சுகாதாரம், கல்வி, கைத்தொழில், பராமரிப்பாளர் ஆதரவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அந்தத் தொகை உதவும். 

குறிப்புச் சொற்கள்