நேப்பாள வெள்ளத்தில் காணாமற்போன சிங்கப்பூரர்கள் குறித்த இரக்கமற்ற கருத்துகளுக்குக் கண்டனம்

நேப்பாள வெள்ளத்தில் காணாமற்போன சிங்கப்பூரர்கள் குறித்த இரக்கமற்ற கருத்துகளுக்குக் கண்டனம்

3 mins read
மனிதநேயத்துடன் நடந்துகொள்ளும்படி துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம் வலியுறுத்தல்
c326cf58-8c96-4a97-af89-63b03e57cfa7
ஆகஸ்ட் 26ஆம் தேதி, நேப்பாள-திபெத் எல்லையில் பனிப்பாறைச் சரிவால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. - படம்: ஏஎப்பி
Google News Preferred Icon

நேப்பாள-திபெத் எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் தேதி நிகழ்ந்த பனிப்பாறைச் சரிவைத் தொடர்ந்து பெருவெள்ளமும் நிலச்சரிவும் பேரழிவை ஏற்படுத்தின. அதில் பாதிக்கப்பட்டோர், அவர்களின் குடும்பத்தார் குறித்துக் கருத்துரைக்கும்போது சிங்கப்பூரர்கள் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமெனக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், மார்சிலிங்-யூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம் இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

இத்தகைய பெருந்துயரம் நடந்துள்ள நிலையில் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அப்பேரிடரில் காணாமற்போன சிங்கப்பூரர்கள் ஒன்பது பேர் ‘உண்மையிலேயே சிங்கப்பூரர்களா?’ என்று கேள்வி எழுப்பிய கருத்துப் பதிவுகள் குறித்து இருவரும் தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளனர்.

திரு அலெக்ஸ் யாம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், நேப்பாளத்திற்கும் திபெத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கை ‘மிகவும் கொடூரமான துயரம்’ என்று குறிப்பிட்டதுடன் இன்னமும் தகவலறிய முடியாத சிங்கப்பூரர்களின் பெயர்களையும் பட்டியலிட்டார்.

எஸ்டீ லோ, கோஷ் அதிதி, இங் கிட் குவென், ராஜேஸ்வரன் அய்யாவூ, ரெங்கராஜன் பிரபு, ஷாலினி தேவி எலன் சோசன், சுபாக்‌ஷி ராவ்லா, சுமித் ராவ்லா, சுப்ரமணியம் திரவியம் ஆகியோர் அவர்கள்.

தமது பதிவிற்கான பின்னூட்டங்களாகப் பதிவிடப்பட்ட கருத்துகளைப் படித்தபோது, தம்மை மேலும் வேதனைக்குள்ளாக்கிய கருத்துகளைக் கண்டதாகத் திரு யாம் கூறினார்.

குடும்பத்தினர் தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை குறித்த தகவலுக்காகத் தவிப்புடன் காத்திருக்கும் வேளையில், சிறுபான்மையினர் சிலர், காணாமற்போனவர்களின் பெயர்களையும் முகங்களையும் பார்த்துவிட்டு ‘அவர்கள் உண்மையிலேயே சிங்கப்பூரர்களா’ என்று கேள்வி கேட்கத் துணிந்துள்ளனர்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அவர்களில் சிலர், மாயமானவர்கள் அங்கேயே சிக்கி இறந்துவிட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் இந்தச் சிங்கப்பூர் குடிமக்களுக்கு அதிகாரிகள் ஏன் உதவ வேண்டும் எனக் கேட்டும் பதிவிட்டிருப்பதாக அவர் கூறினார்.

குடிநுழைவு, குடியுரிமைக் கொள்கைகள், சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கலாம்; ஆனால், அதற்கான நேரமும் இடமும் இதுவன்று என்றும் திரு யாம் வலியுறுத்தியுள்ளார்.

“இப்போது வேண்டாம். தங்கள் உயிரை இழக்கும் அபாயத்தில் உள்ள மனிதர்கள் குறித்து, அவர்களின் குழந்தைகளும் அன்புக்குரியவர்களும் தகவலுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் இதைப்பற்றிப் பேச வேண்டாம்,” என்று தமது ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஒருவரிடம் இரக்கம் காட்டுவதற்கு அவர்களை உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை; அவர்களின் பாதுகாப்புக்காகப் பிரார்த்தனை செய்ய அவர்கள் உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டியதில்லை; அதேபோல் உங்கள் சிங்கப்பூர் அடையாளத்தை நிரூபிக்க இன்னொருவரின் சிங்கப்பூர் அடையாளத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை,” என்று அவர் பதிவிட்டார்.

இத்தகைய கருத்துகள் இனவாதத் தன்மை கொண்டவை மட்டுமன்றி, முற்றிலும் இரக்கமற்றவை என்றும் சிங்கப்பூரர்களாகிய நாம் இதைவிட முதிர்ச்சியுடன் செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.

இவ்வேளையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திரு தினேஷ், “இத்தகைய தருணத்தில் நமது மனிதநேயம்தான் முன்னிலை வகிக்கவேண்டும். காணாமற்போன ஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் பெற்றோர், வாழ்க்கைத்துணை, பிள்ளை, உடன்பிறந்தவர் அல்லது நண்பர்,” என்று குறிப்பிட்டார்.

மேலும், “ஒருவரின் பெயர், இனம் அல்லது தோற்றத்தின் அடிப்படையில் அவர் உண்மையிலேயே சிங்கப்பூரரா என்று கேட்பது இனவாதம் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய செயல் தவறானது, கண்டிக்கத்தக்கது,” என்றார் அவர்.

இதற்கிடையே, இணையத்தில் இனவாதக் கருத்துப் பதிவுகளைக் கண்டு மனமுடைந்து போனதாக, பேரிடரில் காணாமற்போன ஷாலினியின் கணவர் செல்வகணேஷ், 43, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். அவரும் ஷாலினியும் மூன்றாம் தலைமுறை சிங்கப்பூரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
மார்சிலிங் - இயூ டீநாடாளுமன்ற உறுப்பினர்ஃபேஸ்புக்கருத்துகண்டனம்நேப்பாளம்வெள்ளம்