மத்திய வர்த்தக வட்டாரத்தில் வீடுகள், ஹோட்டல்

மத்திய வர்த்தக வட்டாரத்தில் வீடுகள், ஹோட்டல்

1 mins read
d6543963-c560-4101-a63a-5e251db480e2
மார்க்கெட் ஸ்திரீட் இடைக்கால உணவு அங்காடி நிலையம் இருந்த நிலப்பகுதியில் புதிய வீடுகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: பெரித்தா ஹரியான்

மத்திய வர்த்தக வட்டாரத்தில் கூடுதல் வீடுகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராஸ் ஸ்திரீட்டில் உள்ள நிலப்பகுதியில் வீடுகள் கட்டப்படும் என்றும் நகர மறுசீரமைப்பு ஆணையம் கூறியது.

கட்டப்படும் கட்டடங்களின் தரைத்தளம் கடைகளுக்கானது.

தெலுக் ஆயர் ஸ்திரீட் அருகில் உள்ள சைனா ஸ்குவேர் உணவு நிலையம் ஹோட்டலாக மாற்றி அமைக்கப்படக்கூடும்.

தற்போது திறந்தவெளியாக இருக்கும் நிலப்பகுதிகளில் அல்லது பூங்காக்களில் ஹோட்டல்கள் கட்டப்படும் அல்லது வர்த்தகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

“மத்திய வர்த்தக வட்டாரத்தில் புதிய ஹோட்டல் கட்டப்படுவதால் நகர மையம் புத்துணர்ச்சி பெறும். குறிப்பாக, இரவு நேரங்களிலும் வாரயிறுதிகளிலும் அலுவலகக் கூட்டம் இல்லாதபோதிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்,” என்று இஆர்ஏ சிங்கப்பூரின் தலைமை நிர்வாக அதிகாரி யூஜீன் லிம் கூறினார்.

நகர மையத்துக்கு உட்பட்ட முகம்மது சுல்தான் சாலையில் உள்ள நிலப்பகுதி, வர்த்தகப் பயன்பாட்டுடனான குடியிருப்புப் பகுதிக்கான நிலமாக மாற்றி அமைக்கப்பட உள்ளது.

காலாங் ஆற்றுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் கூடுதல் வீடுகள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றங்கள் மூலம் மத்திய வட்டாரங்களில் ஏற்கெனவே உள்ள போக்குவரத்து நிலையங்களுக்கு அருகில் இருக்கும் இடங்களில் மேலும் பலர் வசிக்க இந்த பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் வழிவகுக்கும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்