தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) முதல் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) வரை, தாய்லாந்திற்குப் பணி நிமித்த பயணம் மேற்கொள்கிறார்.
தமது பயணத்தின் போது, திரு சான், தாய்லாந்து தற்காப்பு அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் அதுல் பூந்தும்ஜரோன் மற்றும் தாய்லாந்து தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் தலைமைச் செயலாளர் சாட்சாய் பாங்சுவாட் ஆகியோரைச் சந்திப்பார்.
மேலும், அவர் தாய்லாந்துப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அனுட்டின் சார்ன்விரக்குல், தாய்லாந்து அரசவை ஆலோசகர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சா ஆகியோரையும் சந்திப்பார்.
பேங்காக்கில் இருக்கும்போது, திரு சான் தாய்லாந்து அரச ஆயுதப் படைகளின் கூட்டுத் திறன் கட்டளைத் தலைமையகத்தையும் பார்வையிடுவார்.
திரு சானின் இந்தப் பயணம், சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நெருக்கமான, நீண்டகால இருதரப்புத் தற்காப்பு உறவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
திரு சானுடன் தற்காப்புப் படைத் தலைவர் வைஸ்-அட்மிரல் எரோன் பெங் மற்றும் தற்காப்பு அமைச்சின் மூத்த அதிகாரிகளும் உடன் செல்வார்கள்.

