தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சான் சுன் சிங் தற்காப்பு அமைச்சராக மலேசியாவிற்கு முதல் பயணம்

1 mins read
221ae3dd-6526-4a22-b15b-dc1e9a91b93c
தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் மலேசியாவில் திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் (ஆகஸ்ட் 25,26) இருப்பார். - கோப்புப் படம்: எஸ்பிஎச் மீடியா

தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங், இரண்டு நாள் பயணமாக மலேசியா சென்றுள்ளார். அவர் திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் (ஆகஸ்ட் 25, 26) அங்கிருப்பார்.

திரு சான், மலேசியத் தற்காப்பு அமைச்சர் முகம்மது காலிட் நோர்டினையும் அந்நாட்டின் மற்ற தலைவர்களையும் சந்திப்பார் என்று சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இரு நாடுகளின் கடற்படைகளும் செய்துகொள்ளும் ஒப்பந்தமொன்றின் கையெழுத்து நிகழ்வைத் திரு சான் பார்வையிடுவார். நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு ஆதரவு, ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவதற்கான ஒப்பந்தம் அது.

மலேசியத் தற்காப்பு அமைச்சின்கீழ் செயல்படும் ‘புஸ்பஹனாஸ்’ எனும் தற்காப்பு ஆய்வு நிலையத்தில் முக்கிய உரையொன்றையும் திரு சான் நிகழ்த்துகிறார்.

“சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் நெடுங்காலமாக நிலவும் நட்பார்ந்த இரு தரப்புத் தற்காப்பு உறவின் முக்கியத்துவத்தைத் திரு சானின் பயணம் வலியுறுத்துகிறது,” என்று தற்காப்பு அமைச்சு கூறியது.

திரு சானுடன் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ‌‌ஷான் வாட்டும் தற்காப்பு அமைச்சு அதிகாரிகள் சிலரும் செல்வர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்