தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கல்விமுறை மாற்றங்கள் நீடித்த பலன் தர சமுதாய மனப்போக்கு மாற வேண்டும்: சான் சுன் சிங்

2 mins read
ecac4e0b-62b7-4e73-83cf-f7f93cc91cbe
கல்வி அமைச்சர் சான் சுன் சிங் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கல்வி முறையில் ஏற்படும் மாற்றங்கள் நீண்டகால பலன்தர கலாசாரம், மனப்போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.

பிஎஸ்எல்இ எனப்படும் தொடக்கப்பள்ளி தேர்வு முறையில் மதிப்பெண் பெறுவதை மாற்றி அமைப்பது, அரையாண்டுத் தேர்வுகளை ரத்து செய்வது போன்ற அடிப்படை மாற்றங்கள் மட்டுமே கல்வி முறையில் இருக்கும் அழுத்தத்தை போக்கவோ அல்லது வெற்றி என்ற வார்த்தைக்கு பரந்த அளவிலான அர்த்தத்தைத் தந்துவிடாது. இவை ஏற்பட வேண்டுமானால் சமுதாய மனப்போக்கிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11ஆம் தேதி) தெளிவுபடுத்தினார்.

எஸ்ஜி 60, கல்வி அமைச்சின் 70 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக கல்வி அமைச்சு, கல்வி ஆய்வுக் கழகம், தேசிய கல்விக் கழகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த உரைநிகழ்ச்சியில் திரு சான் கலந்துகொண்டு பேசினார்.

“தகுதி அடிப்படையிலான, கருணையுடன் கூடிய திறந்த மனப்போக்குடைய முறையைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், உன்னத நிலையை அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கியும் செல்ல வேண்டும்,” என்று திரு சான் கூறினார். அவரது உரையில் அவர் சிங்கப்பூர் கல்வி முறை கடந்து வந்த பாதையையும் எதிரே உள்ள சவால்கள் பற்றியும் சுட்டினார்.

இதன் பொருள் என்னவென்றால், கல்விக் கொள்கைகள், அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கலவையாக இருக்க வேண்டும் என்பதே என்று அமைச்சர் விவரித்தார்.

தேசிய கல்விக் கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என கிட்டத்தட்ட 500 பேர்களிடம் உரையாற்றிய திரு சான், கொள்கைகளை அமல்படுத்துவதில் நிலைத்தன்மையும் கடப்பாடும் கொண்டிருப்பது முக்கியம் என்றார்.

கல்வி முறையில் மாணவர்களைப் தரம் பிரிப்பது போன்ற கொள்கைகளுக்கு, எதிர்ப்பு இருந்தாலும் அதன் நீண்டகால நன்மைகளைக் கருதி அவை அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், இருமொழிக் கொள்கையை படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது என்றார் அவர்.

நல்ல ஆசிரியர்கள் நல்ல பள்ளிகளைத்தான் தேடிச் செல்கிறார்கள் என்ற கருத்தை நிராகரித்த கல்வி அமைச்சர், கல்வித் துறை ஒற்றுமையுடன் இருப்பது அவசியம் என வலியுறுத்தினார்.

“அதுபோல், கல்விக் கொள்கைகளை வகுப்போர், அவற்றை செயல்படுத்தும் கல்வியாளர்கள் இடையே விரிசல் ஏற்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது,” என்று அவர் விளக்கினார்.

ஏறத்தாழ ஒரு மணிநேரம் டோவர் சாலையில் உள்ள ஆங்கிலோ-சீன கல்லூரியில் உரையாற்றிய கல்வி அமைச்சர், சிங்கப்பூரின் கல்வி முறை பெரும் அளவில் சாதித்துள்ளபோதிலும் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்