சாங்கி விமான நிலையத்தின் வழியாக கிட்டத்தட்ட 33.01 மில்லியன் பேர் 2024ஆம் ஆண்டின் முதற்பாதியில் பயணம் செய்துள்ளனர்.
கொவிட்-19 கொள்ளைநோய்க்குப் பிந்திய காலகட்டத்தில் ஆண்டின் முதற்பாதியில் பதிவான பயணிகள் போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் இதுவே ஆக அதிகம் என ஜூலை 26ஆம் தேதி சாங்கி விமான நிலையக் குழுமம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் காட்டுகிறது.
2019ஆம் ஆண்டின் நிலையோடு ஒப்பிடுகையில் பயணிகள் போக்குவரத்து 99.3 விழுக்காடு மேம்பட்டுள்ளது.
இவ்வாண்டின் ஏப்ரல் மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 16.5 மில்லியன் பயணிகளை விமான நிலையம் கையாண்டது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 13.4 விழுக்காடு அதிகம்.
2019ஆம் ஆண்டு இதே நிலையோடு ஒப்பிடுகையில் 98.2 விழுக்காடு பயணிகள் போக்குவரத்து மேம்பட்டுள்ளதாகக் குழுமம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சாங்கி விமான நிலையத்தின் வழியாக இந்தோனீசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு மக்கள் அதிக பயணம் மேற்கொண்டனர்.
குறிப்பாக, சீனாவுக்கு அதிக எண்ணிக்கையிலான பயணிகள் சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது இரட்டிப்பாகும். மேலும், கொவிட்-19க்கு முந்திய காலகட்டத்தின் எண்ணிக்கையை இது விஞ்சியது.

