சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து தொடர்ந்து மீட்சி

கொவிட்-19க்கு முந்திய நிலையைக் காட்டிலும் 86% மேம்பட்டுள்ள நிலை

சாங்கி விமான நிலையத்தின் வழியாக கிட்டத்தட்ட 58.9 மில்லியன் பேர் 2023ஆம் ஆண்டில் பயணம் செய்துள்ளனர்.

கொவிட்-19 கொள்ளைநோய்க்கு முந்திய காலகட்டத்தில் பதிவான பயணிகள் போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் 86% மீட்சி இது.

அத்துடன், விமான நிலையம் 2022ஆம் ஆண்டில் கையாண்ட 32.2 மில்லியன் பயணிகளைக் காட்டிலும் 83% அதிகரிப்பு இதுவாகும்.

கொள்ளைநோய் தாக்குவதற்கு முன் 2019ஆம் ஆண்டில் 68.3 மில்லியன் பயணிகள் எண்ணிக்கை விமான நிலையத்தில் பதிவானது.

சாங்கி விமான நிலையத்தில் சுமார் 328,000 விமானப் பயணங்கள் 2023ஆம் ஆண்டில் பதிவாகியதாக சாங்கி விமான நிலையக் குழுமம் ஜனவரி 24ஆம் தேதியன்று வெளியிட்ட தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

2019ல் மொத்தம் 382,000 விமானப் பயணங்கள் பதிவாகின.

2023ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் 16.1 மில்லியன் பேர் விமான நிலையத்தின் வழியாகப் பயணம் செய்திருந்தனர்.

இது கொள்ளைநோய்க்கு முந்திய நிலையின் 90 விழுக்காடாகும்.

சாங்கி விமான நிலையம் அதிகப்படியான பயணிகளை டிசம்பர் மாதத்தில் கையாண்டது. அந்த மாதத்தில் 5.8 மில்லியன் பேர் விமான நிலையம்வழி பயணம் மேற்கொண்டனர்.

இது 2019ன் டிசம்பரில் பதிவான பயணிகள் போக்குவரத்து நிலையின் 91 விழுக்காடாகும்.

அதிகமானோர் பயணம் மேற்கொண்ட தினம் டிசம்பர் 22 என்றும் கூறப்படுகிறது. கிறிஸ்துமசுக்கு முந்திய வெள்ளிக்கிழமையான அந்த தினத்தில் 203,000 பேர் விமான நிலையத்தின் வழியாகப் பயணம் மேற்கொண்டனர்.

சாங்கி விமான நிலையத்தில் டிசம்பர் மாதம் மொத்தம் 30,400 விமானங்கள் தரையிறங்கின அல்லது அங்கிருந்து புறப்பட்டன.

வட அமெரிக்க வட்டாரத்தில் பதிவான பயணிகள் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 2023ல் அதிகப்படியான வளர்ச்சி கண்டிருந்தது.

சாங்கி விமான நிலையத்தின் வழியாக 2023ல் அதிகமாக சென்ற பயணிகள் இந்தோனீசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!