தீபாவளியை முன்னிட்டு கண்கவர் அலங்காரங்களால் பயணிகளைக் கவர்ந்து வருகிறது சாங்கி விமான நிலையம்.
சாங்கி விமான நிலையத்தில் பேரழகுடன் காட்சிதரும் மயில். - படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்
ரங்கோலிக் கோலம், மயில், காதணி என இந்தியப் பாரம்பரியத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் குறிப்பிடும் அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு பல்வேறு அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மருதாணியிடும் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. - படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்
இவற்றுடன், பயணிகளுக்கு மகிழ்வூட்டும் நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மருதாணியிடுதல், முறுக்கு சுவைத்தல் போன்றவை மூலம் சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கும் வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கும் பண்டிகைக்கால உணர்வை வழங்கி வருகிறது சாங்கி விமான நிலையக் குழுமம்.
- படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்
இந்தியப் பண்பாட்டிலும் முக்கிய நிகழ்வுகளிலும் முதன்மை இடம்பெறும் அணிகலன்கள் பூந்தோட்டமாகக் காட்சியளிக்கின்றன.