மார்சிலிங் லேன் புளோக் 214 கீழ் தளத்தில் ஒருவரை ‘சுவிஸ் ஆர்மி’ கத்தியால் தாக்கியதாக இளையர் ஒருவர் மீது டிசம்பர் 24ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்டது.
முகமட் அய்மான் முகமட் ருப்பி, 21, டிசம்பர் 22ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் 25 வயது நபரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்ற ஆவணங்களில் தாக்குதலின் பின்னணி விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் டிசம்பர் 23ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவில் வலைப் பதிவாளரான டேனியல் ரேதா, ‘கிராப்ஃபுட்’ விநியோகிப்பாளரான தனது சகோதரர் தாக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார்.
வாடிக்கையாளருடன் ஏற்பட்ட சச்சரவில் அவர் கத்தியால் தாக்கப்பட்டதாகக் கூறினார்.
கட்டணம் தொடர்பில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அய்மானை கைது செய்தனர்.
இந்த வழக்கு, 2025 ஜனவரி 14ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

