சிம் அட்டை மோசடி தொடர்பில் எண்மர்மீது குற்றச்சாட்டு

சிம் அட்டை மோசடி தொடர்பில் எண்மர்மீது குற்றச்சாட்டு

1 mins read
5d38263c-6a1c-41c3-a38d-3f38a2a7485c
அந்த எட்டுப் பேர் மீதும் செப்டம்பர் 14ஆம் தேதிக்கும் 18ஆம் தேதிக்கும் இடையே நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும். - படம்: பிக்சாபே

பணத்திற்காகப் போலியாகப் பதிவுசெய்யப்பட்ட சிம் அட்டைகளை வழங்கிய குற்றத்திற்காக எட்டுப் பேர்மீது செப்டம்பர் 14 முதல் 18ஆம் தேதி வரை நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படவுள்ளது. 17 முதல் 26 வயதிற்குட்பட்ட அவர்களில் ஏழு பேர் ஆண்கள், ஒருவர் பெண் என்று கூறப்பட்டது.

ஒவ்வொரு சிம் அட்டைக்கும் அவர்களுக்கு $10 முதல் $15 வரை பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சந்தேகத்துக்குரிய எட்டுப் பேரும் தங்கள் பெயர்களில் பதிவுசெய்யப்பட்ட பல சிம் அட்டைகளைக் குற்றக் கும்பலிடம் ஒப்படைத்ததாகக் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தனர்.

குற்றக் கும்பல்கள் இத்தகைய சிம் அட்டைகளைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் மோசடிச் செயல்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

குற்றச் செயல்களுக்குப் பயன்படும் வகையில் சிம் அட்டைகளைப் பிறருக்கு வழங்குவோருக்குத் தண்டனையாக $10,000 வரை அபராதமோ மூன்றாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம். ஏமாற்று வேலைகளுக்கு உடந்தையாக இருப்போர்க்குப் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

பொதுமக்கள் இது தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க 1800-255-000 என்ற தொலைபேசி எண்ணிலோ இணையத்தளம் வாயிலாகவோ காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்
கைதுமோசடிகாவல்துறைநீதிமன்றம்குற்றச்சாட்டுசிம் அட்டை