ஏமஸ் யீ மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

அமெரிக்காவிலிருந்து வியாழக்கிழமை நாடுகடத்தப்பட்டார்

ஏமஸ் யீ மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2026 - 3:42 pm

1 mins read

சிறார் பாலியல் குற்றவாளியான ஏமஸ் யீ மீது தேசியச் சேவையில் சேர்க்கப்படுவதற்கான சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

27 வயது யீ, அமெரிக்காவிலிருந்து வியாழக்கிழமை (மார்ச் 19) நாடுகடத்தப்பட்டார்.

கறுப்புச் சட்டை அணிந்திருந்த அவர், வெள்ளிக்கிழமை காலை மணி 11.50க்குக் காணொளிவழி நீதிமன்றத்தில் தோன்றினார்.

சாங்கி சிறைச்சாலையில் அவரைத் தடுத்துவைக்க அரசாங்கத் தரப்பு விண்ணப்பம் செய்திருந்தது. நீதிபதி அதற்கு ஒப்புதல் வழங்கினார்.

யீ, தம்மைப் பிரதிநிதிக்க வழக்கறிஞரை நியமிக்கப்போவதில்லை என்று நீதிமன்றத்திடம் கூறினார்.

அவரின் வழக்கு மீண்டும் இம்மாதம் 26ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அவருக்குப் பிணை வழங்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்அமெரிக்காதேசிய சேவைபிணைகுற்றச்சாட்டு