லாப நோக்கற்ற நிறுவனமான சிறுவர் உதவிச் சங்கம் 251,329 வெள்ளி திரட்டியுள்ளது.
சங்கம், ஆண்டுக்கு ஒருமுறை நடத்தும் நன்கொடை நிகழ்ச்சியில் இந்த நிதி திரட்டப்பட்டது.
துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட, குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த, கவனிப்பு தேவைப்படும் பின்னணியில் உள்ள குழந்தைகளுக்கும் இளையர்ளுக்கும் திரட்டப்பட்ட நிதி மூலம் உதவி வழங்கப்படும்.
இந்த நன்கொடை விழா வெள்ளிக்கிழமையன்று ஷங்ரிலா ஹோட்டலில் நடந்தது. தேசிய வளர்ச்சி அமைச்சரும் சமூக சேவைகளின் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
திரட்டப்பட்ட நிதி, குழந்தைகள் நல சங்கத்தின் சில செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சங்க ஊழியர்களுக்குச் சம்பளம் உள்ளிட்டவை நன்கொடை நிதியில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
சங்க ஊழியர்கள் நீண்ட நேரம் உழைக்கின்றனர். மெல்ரோஸ் பராமரிப்பு இல்லத்தில் உள்ளவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள், இந்த சேவை மிகவும் கடினமான ஒன்று என்று சங்கத்தின் இயக்குநர் ஆல்வின் கோ தெரிவித்தார்.
மெல்ரோஸ் பராமரிப்பு இல்லத்தில் 7 வயது முதல் 21 வயது உள்ள சிறுவர்கள், இளையர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது.

