சின் சுவீ ரோடு கொலை: சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆடவர்

1 mins read
0a1e87a8-e57a-44a0-91ad-98d70b612334
சின் சுவீ ரோட்டில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் 59 வயது போ சூன் கியாட் சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். - படம்: த. கவி
multi-img1 of 2

சின் சுவீ ரோட்டில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் 59 வயது போ சூன் கியாட் என்ற ஆடவர் சம்பவ இடத்துக்கு புதன்கிழமை (நவம்பர் 12) மீண்டும் அழைத்துச்செல்லப்பட்டார்.

இம்மாதம் 8ஆம் தேதி போ 56 வயது ஜெகந்தன் அருணாச்சலம் என்ற ஆடவரை சின் சுவீ ரோடு, புளோக் 51ல் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 58 வயது டான் பூன் ஹுய் என்ற மற்றோர் ஆடவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டான் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்படவில்லை.

சின் சுவீ ரோட்டில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் 59 வயது போ சூன் கியாட், சம்பவ இடத்திலிருந்து காவல்துறை வேனுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
சின் சுவீ ரோட்டில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் 59 வயது போ சூன் கியாட், சம்பவ இடத்திலிருந்து காவல்துறை வேனுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். - படம்: த. கவி

ஆடவர்களிடையிலான சண்டை அதிகாலை ஒரு மணிக்கும் மூன்று மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடந்ததாகத் தெரிகிறது.

அதையடுத்து போ, டான் ஆகிய இருவர்மீதும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) காணொளி மூலம் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.

சின் சுவீ ரோட்டில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் 59 வயது போ சூன் கியாட் சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சின் சுவீ ரோட்டில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் 59 வயது போ சூன் கியாட் சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். - படம்: த. கவி

சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள டான், கழுத்துப் பட்டை அணிந்து படுக்கையில் படுத்தவாறு காணொளியில் தென்பட்டார்.

கொலை நடந்ததாகக் கூறப்படும் புளோக்கின் 17வது தளத்திற்குக் காவல்துறை அதிகாரிகள் போவை அழைத்துச் சென்றனர்.

சிவப்புச் சட்டையில் கணுக்காலில் விலங்குப் போடப்பட்டிருந்த நிலையில் புளோக்கின் பல தளங்களுக்கு போ கொண்டுசெல்லப்பட்டார்.

19ஆம் தளத்தில் உள்ள வீட்டிற்கு வெளியில் உள்ள நடைபாதையில் அதிகாரிகளின் கேள்விக்குப் போ பதிலளித்தார்.

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் போவிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்