துபாயிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த விமானத்தில் திருடிய சந்தேகத்தின்பேரில் 25 வயது சீன ஆடவர் ஒருவர் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) கைதுசெய்யப்பட்டார்.
திருட்டு குறித்து வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
முதற்கட்ட விசாரணையில், அந்த ஆடவர் தூங்கிக்கொண்டிருந்த பயணி ஒருவரின் பையைத் திருடியதை அப்பயணியின் மனைவி பார்த்ததாகத் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரைக் கண்டித்த அப்பெண் பின்னர் தன் கணவரிடம் நடந்ததைக் கூறினார்.
விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விமான நிலையக் காவல்துறை அதிகாரிகள் அந்த ஆடவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் உரிய விளக்கமளிக்கத் தவறியதாகக் கூறப்பட்டது.
அதையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

